நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகும்.. கடைசி நேரத்தில் தேதியை மாற்றிய தேசிய தேர்வு முகமை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு நீட் இளநிலை தேர்வுக்கான தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழு​வதும் வரும் மே 3 ஆம் தேதி நடை​பெற உள்ள நீட் தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட் இன்று வெளி​யாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வை எழுத தமிழகத்தில் 2 லட்சம் மாணவ மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது.

NEET Admit Card

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​புக்​கான மாணவர் சேர்க்​கைக்​கு நீட் தேர்வு கட்​டா​யம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனுமதிச் சீட்டு (Hall Ticket) இன்று வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 27) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.என்​டிஏ இணை​யதளத்​தில் (https://neet.nta.nic.in) நீட் ​தேர்​வுக்​கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்​ரவரி 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 11 ஆம் தேதி​யுடன் முடிவடைந்​தது. விண்​ணப்ப பரிசீலனை​யும் முடிந்த நிலை​யில், NTA இணை​யதளத்​தில் இன்று ஹால் டிக்​கெட் பதிவேற்​றம் செய்​யப்பட உள்​ளது. தேர்வுக்கு விண்​ணப்​பித்த மாணவ, மாணவி​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். நுழைவுச் சீட்டில் தேர்வர்களின் பெயர், தேர்வு மையத்தின் முழு முகவரி போன்ற முக்கிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

நீட் தேர்வு மதியம் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​களில் தேர்வு நடை​பெறும்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாணவர்கள் சிரமமின்றித் தேர்வு எழுதத் தேசியத் தேர்வு முகமை (NTA) விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சில மாணவர்களுக்குத் தங்களது இருப்பிடத்திலிருந்து தேர்வு மையம் தூரமாக அமைய வாய்ப்புள்ளதால், ஹால் டிக்கெட் வெளியான உடன் மாணவர்கள் தங்களது மையங்களைச் சரிபார்த்து, முன்கூட்டியே செல்லத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் இருந்து தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஹால்டிக்கெட்டில் மாணவர்களின் பெயர், பதிவு எண், தேர்வு மையம், தேர்வு மையத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அதில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தேர்வு எழுத செல்லும் போது தேர்வறைக்கு செல்ல இந்த ஹால்டிக்கெட்டை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+