நேபாளத்தை உருக்குலைத்த பேரழிவு..இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி! பெரிய பாதிப்பு..நிபுணர்கள் சொல்வதென்ன?
டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பேரழிவு உலக அளவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திபெத் எல்லைப் பகுதியில் பனி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், எல் நினோ தாக்கம் தான் இதற்கு காரணம் என்கின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவைத் தொடர்ந்து, இந்தியாவும் இமயமலைப் பகுதிகளின் பாதுகாப்பு குறித்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் புவியியல் நிபுணர்கள்.
நேபாளத்தை வரலாறு காணாத வெள்ளப் பேரழிவு புரட்டி போட்டு இருக்கும் நிலையில் இதுவரை 550 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதும் இடிபாடுகள் மற்றும் சேற்று குவியல்கள், ஆற்று ஓரங்கள் என உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

போடேகோஷி நதி நதியில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கு சுனாமியை மிஞ்சும் அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அங்கிருக்கும் வீடுகள் பாலங்கள் என அனைத்தையும் தரைமட்டமாக்கிவிட்டு சென்றது.
வெள்ளத்தோடு பாறைகள், மண், சேறு கலந்து வந்த பெரும் பிரளயத்தால் பொதுமக்கள் பலரும் தங்கள் இன்னுயிரை இழந்து இருக்கின்றனர். சீனாவை ஒட்டி இருக்கும் எட்டு மாவட்டங்கள் நிலைகுலைந்து இருக்கும் நிலையில், ரசுவா, நுவாகோட், தடிங்க் ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் சீரழிந்துள்ளன. அப்பகுதி முழுவது, சேரும் சகதியுமாக உடல்கள் மிதக்கும் காட்சி பதற வைக்கும் அளவில் இந்த கோர காட்சிகளாக இருக்கிறது.
இமயமலையிலிருந்து பனிப்பாறை உருகி உடைந்து வெள்ளமாகி, மண், சேறு, பாறை என அடித்து வந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஒரு மாயமானதாக சொல்லப்படும் நிலையில் பலியானவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இமயமலையில் இந்தியா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர் புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் வல்லுநர்கள்.
இதுதொடர்பாக பேசியுள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (CUSAT) கடல் அறிவியல் பள்ளியில் புவியியல் மற்றும் புவி இயற்பியல் துறைத் தலைவரான டாக்டர் பி.எஸ். சுனில், இமயமலைப் பகுதியின் தற்போதைய சூழல் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் முதல் மியான்மர் வரை இமயமலைத் தொடர் பரந்து விரிந்திருக்கும் நிலையில் அதில் ஆயிரக்கணக்கான பனிப் பாறைகள் இருக்கின்றன.
தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக இவற்றில் பல பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. சில பனிப் பாறைகள் முன்பு இருந்த இடங்களில் இருந்து கணிசமான அளவுக்கு பின்வாங்கி இருக்கின்றன. தற்போது எல் நினோ தாக்கம் அதிகரிக்கும் சூழல் வந்திருக்கும் நிலையில் பனி மற்றும் உறை பனி மேலும் வேகமாக உருகும் சூழல் உருவாகலாம். இமயமலை நில அமைப்பு மிகவும் சிக்கலாக இருக்கும் நிலையில் பல பகுதிகளில் பனி, உறைபனி மற்றும் மண் கலந்த அமைப்புகள் காணப்படுகின்றன.
இதனால் செங்குத்தான மலைச்சரிவுகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. பனி வேகமாக உருகும் போது மண் பிடிமானம் குறைந்து நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம் என்கின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெறும் மற்றொரு நாட்டில் நடந்த சம்பவமாக இந்தியா கருதக்கூடாது என்றும், இமய மலைப் பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் அனைத்துக்கும் இது ஒரு எச்சரிக்கை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
