கொரோனாவின் பேரன்.. ஓமைக்ரானின் மகன்! சிங்கப்பூரை உலுக்கிய வைரஸ் தொற்று இந்தியாவில் பரவுகிறதா?
டெல்லி: சிங்கப்பூரில் அதிகளவில் பரவி வரும் ஓமைக்ரான் தொற்றின் புதிய மாதிரி இந்தியாவிலும் பரவத் தொடங்கி இருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா உயிர்கொல்லி வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

புதிய மாதிரிகள்
மக்கள் பெரும்பாலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அதற்கே சவால்விடும் வகையில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாதிரிகள் அடுத்தடுத்து உருமாறி பெரியளவில் பரவி பாதிப்பை உண்டாக்கி வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவ உலகமே என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நிற்கிறது.

ஓமைக்ரான்
அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் புதிய மாதிரியான ஓமைக்ரான் இந்தியா உட்பட உலக நாடுகள் முழுவதும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமான மக்கள் இதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தற்போது ஓமைக்ரானின் புதிய மாதிரிகளும் உருவாகி பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா, ஐரோப்பா
ஓமைக்ரானின் புதிய மாதிரியான BQ.1 மற்றும் BQ.1.1 என்ற நோய் எதிர்ப்பு சக்தியை உடைத்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த மாதிரிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இந்த மாதிரி கொரோனா தொற்றுகள் இன்னும் பரவவில்லை.

மாதிரிகள்
இதை தொடர்ந்து BA.2.75, BJ.1 ஆகிய மாதிரி கொரோனா வைரஸ் தொற்றுகளும் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன. இந்தியாவில் BA.2.75 மாதிரி தொற்று பரவி வந்தது. இந்த நிலையில் BA.2.75 மற்றும் BJ.1 ஆகிய மாதிரிகள் இணைந்து புதிய ஆபத்தான கொரோனா மாதிரி உருவாகி இருக்கிறது. அதன் பெயர் XBB. இதுதான் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து சிங்கப்பூரில் பரவி வருகிறது.

சிங்கப்பூர்
இந்த XBB மாதிரி குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் மற்ற கொரோனா மாதிரிகளை விட இதில் அதிகளவிலான முட்கள் இருப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை உடைத்துக் கொண்டு மனித உடலை தாக்கும் அளவில் பலம் கொண்டதாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் சிங்கப்பூரில் உயிரிழப்புகள் அதிகளவில் நிகழவில்லை.

இந்தியா
இந்தியாவிலும் ஒரு மாதத்துக்கு 2,500 முதல் 3,000 மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 10,000 வரை வருவதற்கான திறன் உள்ளது அதிகாரிகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் ஒரு வாரத்துக்கான சராசரி கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 2,500 ஆக உள்ளது. அதே நேரம் ஏராளமான நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே குணமாகிவிடுவதால் அச்சப்பட ஏதுமில்லை என்கிறார் மருத்துவர் ஜிசி கில்னானி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications