டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழில் நிர்மலா சீதாராமன் வைத்த “புகார்”.. கொந்தளித்த திமுகவினர்! தமிழக சட்டமன்றம்போல் மாறிய லோக்சபா

Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோது தமிழ்நாடு அரசு ஏன் குறைக்கவில்லை என மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் கேள்வி எழுப்பியதால் எதிர்க்கட்சிகள் ஆவேசமடைந்தனர்.

Recommended Video

    விலைவாசி உயர்வு குறித்து விதி 193ன் கீழ் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் விவாதம்

    கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

    கோமியத்துக்கு 50% கூட ஜிஎஸ்டி போடுங்க.. பால், தயிருக்கு ஏன்? -லோக்சபாவில் திமுக எம்பி செந்தில்குமார்கோமியத்துக்கு 50% கூட ஜிஎஸ்டி போடுங்க.. பால், தயிருக்கு ஏன்? -லோக்சபாவில் திமுக எம்பி செந்தில்குமார்

    எதிர்க்கட்சிகள் கோரிக்கை

    எதிர்க்கட்சிகள் கோரிக்கை


    பண வீக்கம், பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    விலைவாசி விவாதம்

    விலைவாசி விவாதம்

    இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசையும், அதன் பொருளாதார கொள்கைகளையும், ஜி.எஸ்.டி. வரி உயர்வையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

    நிர்மலா சீதாராமன் பேச்சு

    நிர்மலா சீதாராமன் பேச்சு

    இதனை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பதிலுரையில், திடீரென தமிழில் பேசினார். "கடந்த 2021 நவம்பர் 3 ஆம் தேதி பெட்ரோல் மீதான வரியை ரூ.5 குறைத்தார் மோடி ஐயா. டீசல் மீது ரூ.10 வரியை குறைத்தார். மே 2022-ல் பெட்ரோல் மீது ரூ.9.50 பைசா வரியும், டீசல் மீது ரூ.7 வரி குறைக்கப்பட்டது. அதே நாள் சமையல் எரிவாயு உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 மானியம் கொடுப்பதாகவும் அறிவித்தார்.

    எதிர்க்கட்சிகள் முழக்கம்

    எதிர்க்கட்சிகள் முழக்கம்

    தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன் திமுக தேர்தல் வாக்குறுதியில் ரூ.5 குறைப்போம். டீசலுக்கு ரூ.4 குறைப்போம் என்று கூறினார்கள். சமையல் எரிவாயுக்கு ரூ.100 மானியம் தருவதாகவும் சொன்னார்கள். இதனை கண்டித்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்பிக்கள் முழக்கமிட்டனர். அப்போது அவேசமடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் "என்னால் கத்த முடியாது.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    அவர்கள் பேசும்போது நான் கேட்கனும். ஆனால் பதில் கொடுக்கும்போது அவர்கள் தடுத்து நிறுத்துவது நல்ல அரசியல் இல்லை. நான் சொல்றத நீங்க கேட்டுதான் ஆக வேண்டும். நீங்கள் சொல்லியதை நான் கேட்டேன். நான் உண்மையை சொல்வதால் உள்நோக்கத்துடன் அவர்கள் சத்தமிடுகிறார்கள். ஆட்சேபனை இருந்தால் அவர்கள் பின்னர் பேசட்டும்" என்றார்.

    English summary
    Nirmala sitaraman argue with DMK, Congress MPs in Loksabha: : பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தபோது தமிழ்நாடு அரசு ஏன் குறைக்கவில்லை என மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் கேள்வி எழுப்பியதால் எதிர்க்கட்சிகள் ஆவேசமடைந்தனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X