பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ4.78 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு- ராஜ்நாத்சிங் மகிழ்ச்சி 'ட்வீட்'
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ4.78 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளில் பாதுகாப்பு மூலதன செலவினங்களில் முதல் முறையாக 19% அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ4.78 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பாதுகாப்பு மூலதன செலவினங்களுக்கு ரூ1.35 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு மொத்தம் ரூ4.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
Special attention has been paid to economic reforms, employment generation, capital formation and creating infrastructure in India. Based on 6 pillars of good governance this Budget will usher India into a new era of inclusive growth and prosperity. #AtmaNirbharBharatKaBudget
— Rajnath Singh (@rajnathsingh) February 1, 2021
எல்லையில் சீனாவின் ஊடுருவல் அச்சுறுத்தல் தொடரும் நிலையில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்பு மூலதன செலவு ரூ1.35 லட்சம் கோடியை உள்ளடக்கி பாதுகாப்பு துறைக்கு ரூ4.78 லட்சம் கோடி நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பாதுகாப்பு மூலதன செலவினங்களில் தற்போது 19% அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இதுதான் மிக அதிகபட்சமானது என்று கூறியுள்ளார்.
I specially thank PM& FM for increasing the defence budget to 4.78 lakh cr for FY21-22 which includes capital expenditure worth Rs 1.35 lakh crore. It is nearly19 percent increase in Defence capital expenditure. This is highest ever increase in capital outlay for defence in 15yrs
— Rajnath Singh (@rajnathsingh) February 1, 2021
மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மூலதனங்கள் உருவாக்கம், உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான 6 தூண்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் புதிய சகாப்தத்துக்கு கொண்டு செல்லும் என்றும் ராஜ்நாத்சிங் பாராட்டியுள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications