செயற்கை சுவாசம், பல்ஸ் ஆக்ஸிமீட்டர்.. சிவ சிவ! நான் சொல்வதெல்லாம் உண்மை.. ஆதாரத்தை வெளியிட்ட நித்தி
டெல்லி: சிவசிவ நான் சொல்வதெல்லாம் உண்மை என புகைப்பட ஆதாரத்தையும் நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கைலாசாவின் அதிபர் என தன்னை தானே அறிவித்து கொண்டவர் நித்தியானந்தா. பாலியல் புகாரில் சிக்கி போலீஸார் கண்களில் மண்ணை தூவி விட்டு கைலாசா எனும் தீவில் சிஷ்யர்கள் புடைச்சூழ நித்தி இருப்பதாக கூறியுள்ளார்.
தினந்தோறும் பேஸ்புக்கில் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். அவ்வப்போது தன்னை பிடிக்க முயற்சிக்கும் போலீஸாருக்கு தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் பேசுவார். சில நேரங்களில் தமிழிலும் பேசுவார்.

மக்கள் ரசனை
இதை மக்கள் ரசிப்பார்கள். இந்த நிலையில் நித்தியானந்தா படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. மேலும் அவர் சொற்பொழிவு ஏதும் ஆற்றாததால் அவர் இறந்துவிட்டார் என பலர் வதந்தி பரப்பி வந்தனர். இதை மறுத்த நித்தியானந்தா, நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு என ஒரு பேஸ்புக் போஸ்ட்டையும் வெளியிட்டிருந்தார்.

புகைப்படங்கள்
மேலும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதில் அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் நித்தியானந்தாவுக்கு என்னாச்சு என கேட்டிருந்தனர். இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து நித்தியானந்தா நேற்றைய தினம் ஒரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனது இதயம் 18 வயது இளைஞரின் இதயத்தை போல் இயங்குகிறது.

உடல் பரிசோதனை
எனது உடல் பரிசோதனைகள் எல்லாம் முடிந்துவிட்டன. எல்லா மருத்துவ அறிக்கைகளும் நன்றாக இருக்கின்றன. எனது உடலில் அருணகிரி யோகேஸ்வரா இருக்கிறார். எனவே உங்கள் நலனுக்காகவோ இல்லை இந்த உலகின் நலனுக்காகவோ நான் உயிருடன் நீண்ட காலம் வாழ யாராவது விரும்பினால், அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள அருணகிரி யோகேஸ்வர ஜீவசமாதிக்கு போய் விளக்கு ஏற்றுங்கள்.

மகிழ்ச்சி
நான் எத்தனை காலம் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அருணகிரி யோகேஸ்வரர்தான். சீடர்கள், பக்தர்கள் அன்பு என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். நிர்வி கல்ப சமாதி நிலையிலேயே எனது உடல் நன்றாக இயங்கும். ஞானவாபி மசூதியில் காசி விஸ்வநாதரின் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதை அறிந்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

செயற்கை சுவாசம்
இதை படித்தவுடன் செயற்கை சுவாச கருவிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன். சில மணி நேரங்களுக்கு நான் அங்கும் இங்கும் நடந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். செயற்கை சுவாசம் இல்லாமல் நான் சுவாசித்தேன். என்னால் பேசவோ எழுதவோ முடியாமல் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் எழுதுகிறேன் (எனது விரலில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வைத்து எனது இதயத்தை கண்காணித்ததால் என்னால் விரலை பயன்படுத்தமுடியவில்லை). பேஸ்புக்கிலும் சோசியல் மீடியாவிலும் என்னால் முடிந்த வரை மெதுவாக டைப் செய்கிறேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் சிவ சிவ நான் சொல்வதெல்லாம் உண்மை என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பின்னர் அவரது பெயரையும் நேரத்தையும் எழுதியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications