144 கிமீ வேகத்தில் சென்றாலும் அபராதம் இல்லையாம்.. நிதின் கட்கரி சொன்ன மிக முக்கியமான தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் எக்ஸ்பிரஸ்வே சாலைகளின் நெட்வொர்க் சீராக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே எக்ஸ்பிரஸ் சாலைகளில் 144 கிமீ வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு ஓவர் ஸ்பீட்டிற்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நாம் விரிவாக பார்க்கலாம்!

நமது நாட்டில் மத்திய அரசு இப்போது எக்ஸ்பிரஸ் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முக்கிய நகரங்களை எக்ஸ்பிரஸ் சாலைகள் மூலம் இணைக்கப்படும்போது போக்குவரத்து செலவுகள் கணிசமாக குறைகிறது. இதனால் மத்திய அரசு பல எக்ஸ்பிரஸ் சாலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

Nitin Gadkari on Expressway Speeding Nitin Gadkari Expressway

நிதின் கட்கரி

இதற்கிடையே இந்தியாவின் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும் வாகனங்களுக்கு ஓவர் ஸ்பீட்டிற்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் நெடுஞ்சாலைகளின் எதிர்காலம் குறித்த இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி இந்த கருத்துகளை தெரிவித்தார்.

அதற்கும் மேல் கூட அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி 20 சதவீதம் வரை கூடுதல் வேகத்தில் இயக்குவோருக்கும் அபராதம் விதிக்க வேண்டாம் என்றும் அதற்கு மேல் வேகத்தில் செல்பவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகளில் தற்போது மணிக்கு 100 முதல் 120 கிமீ வரை வேக வரம்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

144 கிமீ வரை அபராதம் இல்லை?

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வேகமாக சென்றதாக சிலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். அதற்கும் மேலாக 20 சதவீதம் வரை வேகத்தை அதிகரித்து சென்றாலும் விட்டுவிடுங்கள் என கூறியுள்ளேன். அதற்கு மேல் சென்றால் அபராதம் விதியுங்கள் என அறிவுறுத்தி இருக்கிறேன்" என்றார்.

அதன்படி மணிக்கு 120 கிமீ ஸ்பீட் லிமிட் கொண்ட சாலையில், 20 சதவீதம் கூடுதல் வேகம் என்பது மணிக்கு 144 கிமீ ஆகும். அதேநேரம் இந்த வேகம் வரை நீங்கள் சென்றால் நிச்சயம் அபராதம் இருக்காது என அர்த்தமில்லை. அவர் அபராதம் விதிக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருப்பதாக மட்டுமே கூறியிருக்கிறார். சாலைகளில் வேக வரம்புகளை அதிகாரப்பூர்வமாக மாற்றியதாக அவர் தெரிவிக்கவில்லை. எனவே, 120ஐ தாண்டினால் உள்ளூர் அதிகாரிகள் நினைத்தால் அபராதம் விதிக்கலாம்.

புதிய தொழில்நுட்பம்

இந்தியாவின் நெடுஞ்சாலை நெட்வொர்க் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க, ஏஐ அடிப்படையிலான மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ATMS) அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அதற்கு தொழில்துறையினர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார். இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை துல்லியமாக கண்காணிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

E20 பெட்ரோல்

இதற்கிடையே E20 பெட்ரோல் குறித்து பேசிய நிதின் கட்கரி, எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிரான போராட்டங்கள், பணம் கொடுத்து நடத்தப்படும் பிரச்சாரம் என்று அவர் விமர்சித்தார். அவர் மேலும், "2022ம் ஆண்டு முதல் 4 கோடி கார்கள், 20 கோடி இருசக்கர வாகனங்கள் E20 எரிபொருளை பயன்படுத்தி வருகின்றன. எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு எத்தனால் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இப்போது மீண்டும் எல்லாம் அமைதியாகிவிட்டது. இதை வைத்தே தெரியவில்லையா.. இது பணம் கொடுத்து நடத்தப்பட்ட பிரச்சாரம் தான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+