டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வங்கிகளை இணைப்பதால், ஊழியர்கள் வேலை இழப்பார்களா? நிர்மலா சீதாராமன் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா சீதாராமன் அதிரடி | Nirmala Sitharaman Pressmeet

    டெல்லி: கனரா வங்கி, உட்பட பல பெரிய வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். அதேநேரம், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.

    பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். பொதுத் துறை வங்கி தலைவர்களை சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    No jobs to be lost due to bank mergers: Nirmala Sitharaman

    பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படுகிறது.

    கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படுகிறது.

    யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்பொரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய மூன்றும் இணைக்கப்படும்.

    இந்தியன் வங்கி- அலகாபாத் வங்கியுடன் இணையும்.

    2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். அதேநேரம், எந்த ஒரு ஊழியரும், இந்த இணைப்பின் காரணமாக, பணியிழப்புக்கு உள்ளாக மாட்டார்கள். வங்கிகள் வலுப்பெறும். இவ்வாறு, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    English summary
    Finance Minister Nirmala Sitharaman has clarified that no bank employee will lose his/her job.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X