மிக்சிங் வேக்சின்கள் இந்தியாவில் போடப்படாது.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி :மிக்சிங் வேக்சின்கள் இந்தியாவில் போடப்படாது என்றும் கோவேக்சின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களும் மக்களுக்கு எப்போதும் போல் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
Recommended Video
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை கலப்பு செய்து பயன்படுத்தினால் நல்ல பலன் உண்டா என்பது குறித்து போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. எனவே அப்படிப்பட்ட சான்றுகள் சேகரிக்கப்படும வரை . தடுப்பூசி குறித்த எஸ்ஓபியில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து பயனாளிகளுக்கும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டுமே சரியான காலக்கட்டத்தில் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது .
கோவிஷீல்டின் இரண்டாவது டோஸை நீக்கிவிட மத்திய அரசு பரிசீலிக்கக்கூடும் என்று மூத்த அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது.
மேலும் கொரோனா தடுப்பு நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா சமீபத்தில், வெவ்வேறு கோவிட் -19 தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளை கலப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா என்பதை தீர்மானிக்க இந்தியா சோதனை தொடங்கலாம் என்றும் கூறியிருந்தார், இதனால் இரண்டு தடுப்பூசிகள் மிக்சிங் செய்து போடப்படுமா என்ற கேள்வியும் கவலையும் எழுந்தது.
இந்நிலையில் நிதி ஆயோக் மற்றும் கோவிட் -19 பணிக்குழுவின் முக்கிய உறுப்பினர், டாக்டர் வி.கே. பால், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினுக்கான தடுப்பூசி அட்டவணையில் அரசாங்கம் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்ர்
"கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சினுக்கு இந்தியாவில் பின்பற்றப்படும் இரண்டு-டோஸ் விதிமுறைகளில் முற்றிலும் எந்த மாற்றமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கோவிஷீல்ட்டின் இரண்டாவது டோஸ் 12 வாரங்களுக்குப் பிறகு வழங்கப்படும், மேலும் கோவாக்சின் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் முதல் டோஸுக்கு 4-6 வாரங்களுக்குப் பிறகு, நாங்கள் இந்த அட்டவணையைத் தொடர்வோம், எங்கள் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுப்போம். இது குறித்த குழப்பங்களை தவிர்க்க வேண்டும், " என டாக்டர் வி.கே. பால் கூறினார்.












Click it and Unblock the Notifications