இதே நம்மூராக இருந்தா! சைக்கிள் கேப்பில் லாரியே ஓடிருக்குமே.. ஆனந்த் மகிந்திராவை அசர வைத்த போட்டோ!
டெல்லி: டிராபிக் ஜாமின் போது பெரும்பாலும் எரிச்சலுடனேயே காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். கடி ஜோக் என்ற பெயரில் யாருக்கும் பிடிக்காத ஜாம் எது என்று கேட்டால் கூட டிராபிக் ஜாம் என்பது பதிலாக இருக்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 4,50,000 சாலை விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அவற்றில் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துகள் நடப்பதாகவும் ஒவ்வொரு 4 நிமிடங்களில் ஒருவர் இறப்பதாகவும் கூறுகின்றனர்.
பெரும்பாலான சாலை விபத்துகள் அதாவது 60 சதவீத விபத்துகள் அதிக வேகத்தால் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ஹெல்மெட்
அது போல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்ட வேண்டும் என விதிகள் இருக்கின்றன. இந்த விதிகள் எல்லாம் டிராபிக்கில் போலீஸாரை பார்க்கும் வரை மட்டும் கடைப்பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அவர்களை கடந்து விட்டால் வழக்கம் போல் தலையில் இருக்கும் ஹெல்மெட் பெட்ரோல் டேங்க் மீது இருக்கும்.

சாலை பாதுகாப்பு வார விழா
சாலை பாதுகாப்பு வார விழா என மோட்டார் வாகன அலுவலகங்களில் விழிப்புணர்வுக்காக கொண்டாடப்படுகிறது. இதில் லைசன்ஸ் எடுக்க வருபவர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் பொதுமக்கள் கலந்து கொண்டதாக தெரியவில்லை.

பச்சை விளக்கு
அது போல் பச்சை விளக்கு போட்ட பிறகு சிறிது நேரத்தில் மஞ்சள் விளக்கு போடப்படும். அப்போது வாகனங்கள் தங்கள் வேகத்தை குறைத்து நிற்க வேண்டும். ஏனென்றால் அடுத்தது சிவப்பு விளக்கு போடப்படும் என்று பொருள். ஆனால் மஞ்சள் விளக்கு போட்டாலும் சிக்னலை பைக் ரேஸில் கலந்து கொள்வது போல் வேகமாக கடந்துவிடுகிறோம்.

சிக்னல்
அலுவலக நேரங்களில் சிக்னல்களில் வண்டிகள் வரிசை கட்டி நிற்கும். ஆனால் பொறுமையாக நிற்க முடியாத சிலர் பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில் ஹாயாக வண்டியை எடுத்துக் கொண்டு முன்னாடி போய் நிற்பார்கள். சாலையோரம் டிராபிக்கில் நடக்க முடியாததால்தான் நடைபாதை அமைத்து அதில் பாதசாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் நம்மாட்களோ அதிலேயே வாகனத்தை ஓட்டிக் கொண்டு முன்னால் செல்ல முண்டியடிப்பர்.

எத்தனை வசை
இப்படியாகத்தான் "டேய் சாவுகிராக்கி, வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா, அறிவு இல்லை? சிக்னல் போட்டிருக்காண்டா வெண்ணெய்... " இப்படி டீசன்ட்டான திட்டுகளும் , கெட்ட வார்த்தைகளும் நிறைய இடங்களில் உபயோகப்படுத்துவதை பார்த்திருப்போம். டிராபிக் ரூல்ஸை மதிக்க வேண்டும் என்றால் அது மிசோரம்தான்பா என சொல்லும் அளவுக்கு இணையதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

என்னா அற்புதம்
அந்த புகைப்படத்தில் இரு புறமும் இயங்கக் கூடிய டூ வே சாலை இருக்கிறது. அதில் நடுவில் வெள்ள நிற கோடு உள்ளது. ஒரு பக்கம் நீண்ட வரிசையில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு வாகனம் கூட வெள்ளை கோட்டை தாண்டி செல்லவில்லை. இவர்களுக்கு எத்தனை பொறுமை! எதிர்புறம் சாலை காலியாக இருந்த போதிலும் சிக்னலுக்காக காத்திருக்கிறார்களே தவிர டிராபிக் விதிகளை மீறவில்லை.

நல்ல மெசேஜ்
இந்த புகைப்படத்திற்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கருத்து சொல்லியுள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் என்ன அற்புதமான புகைப்படம் இது! ஒரு வாகனம் கூட வெள்ளை நிற கோட்டை தாண்டி நிற்கவில்லையே! நம் உயிரை காப்பாற்றிக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது என்ற நல்லதொரு கருத்தையும் இந்த படம் கூறுகிறதே. விதிகளை மதியுங்கள். மிசோரமுக்கு பெரிய சல்யூட் என தெரிவித்துள்ளார்.

எத்தனை பொறுமை!
இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் இந்த மிசோரம் மக்களுக்கு இத்தனை பொறுமையா. டிராபிக் ரூல்ஸை மதித்தாலே கோபம் குறைந்து ரத்த அழுத்தமும் குறையுமே என்கிறார்கள். அதே நம்மூராக இருந்தால் எதிர் திசையில் நைஸாக முன்னோக்கி சென்று போலீஸாரை பார்த்தும் ஜெர்க்காகி நல்லவங்க போல் வரிசையில் நின்று விடுவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications