பி.எப். மீதான 8.1% வட்டி விகிதத்தை குறைக்கப் போறீங்களா?வைகோ கேள்விக்கு மத்திய அரசு சொன்ன பதில் என்ன?
டெல்லி: வருங்கால வைப்பு நிதியான பி.எப். மீதான 8.1% வட்டி விகிதத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கேள்விக்கு ராஜ்யசபாவில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ராஜ்யசபாவில் வைகோ எழுப்பிய கேள்வியும் மத்திய அரசின் பதிலும்: (அ) 2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.1 சதவிகிதமாக அரசு ஒப்புதல் அளித்துள்ளதா? (ஆ) அப்படியானால், 40 ஆண்டுகளில் மிகக் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
(இ) ஓய்வூதியத்திற்கான நிதியைச் சேமிப்பதற்கான ஒரே வழி வருங்கால வைப்பு நிதி மட்டுமே என்பதால், தொழிலாளர் வர்க்கத்தால் ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதா? (ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்யுமா? (உ) இல்லையெனில், அதற்கான காரணங்கள் என்ன?

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி 21.07.2022 அன்று அளித்துள்ள பதில்: (அ) முதல் (உ): பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 1952 இன் பாரா 60(1) விதிகளின்படி, பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒவ்வொரு பணியாளரின் கணக்கில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் வரவு வைக்கப்படும்.
மத்திய வைப்பு நிதி காப்புக் குழு (CBT), பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF)யுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் அதன் முதலீடுகளில் இருந்து பெறும் வருமானத்தைப் பொறுத்தது.
வருங்கால வைப்பு நிதித் திட்டம், 1952 இன் படி மட்டுமே அத்தகைய வருமானங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மத்திய வைப்பு நிதி காப்புக் குழு, பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியத்தில் 8.10 சதவீத வட்டி விகிதத்தை 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு, பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட,பொது வருங்கால வைப்பு நிதி 7.10%, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 7.40%, சுகன்யா சம்ரித்தி நிதித் திட்டம் 7.60% போன்ற திட்டங்களை ஒப்பிடும்போது, பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகம்.
2021-2022 ஆம் நிதி ஆண்டிற்கான பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தை 8.10% மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications