எது.. நான் ராஜினாமா செய்யப்போறேனா? அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல.. முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்
டெல்லி: பிரதமர் மோடி உடனான சந்திப்பைத் தொடர்ந்து எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதை எடியூரப்பா முற்றிலுமாக மறுத்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவான போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அக்கட்சியால் பெற முடியாமல் போனது.
இதனால் அப்போது காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. இருப்பினும், இந்த அரசு 2019ஆம் ஆண்டு கவிழ்ந்தது.

திடீர் சலசலப்பு
அதைத் தொடர்ந்து பாஜக தலைமையில் கர்நாடக அரசு உருவானது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கர்நாடகாவில் பாஜக அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், எடியூரப்பா தனது அமைச்சரவையில் உள்ள சில சீனியர் அமைச்சர்கள் நீக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மோடி - எடியூரப்பா சந்திப்பு
இந்நிலையில், ஆட்சி நிர்வாகத்தில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா அதிகம் தலையிடுவதாகப் பல சீனியர் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடியை எடியூரப்பா டெல்லியில் நேரில் சந்தித்தார். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ராஜினாமா
மேலும், அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரையும் நேரில் சந்திக்கவுள்ளார். இந்நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக எடியூரப்பா ராஜினாமா செய்யவுள்ளதாக மீண்டும் செய்திகள் கசியத் தொடங்கின. அவருக்குப் பிறகு கர்நாடக முதல்வர் பதவி யாருக்குக் கொடுக்கப்படும் என்பதில் உறுதியான தகவல் இல்லாமலேயே இருந்தது.

மறுப்பு
இருப்பினும், தான் ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவலை எடியூரப்பா முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, "இந்தத் தகவலில் உண்மை இல்லை. கர்நாடகாவில் பாஜக தலைமை மாற்றப்படும் என வெளியான தகவல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அப்படி எதாவது இருந்தால் நீங்கள் எனக்குச் சொல்லுங்கள்" எனப் பதில் கேள்வி எழுப்பினார்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்?












Click it and Unblock the Notifications