டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஸ்ஸான முக்கிய "பாயிண்ட்".. ஓபிஎஸ் வைத்த ஒரு வாதத்தால் ட்விஸ்ட்.. எடப்பாடி கனவிற்கு "இடைக்கால" செக்

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வைத்த வாதம் கவனம் பெற்றது.

அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வரும் வரை இந்த தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக எடப்பாடியிடமும் உச்ச நீதிமன்றம் உறுதி வாங்கி உள்ளது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டும் எடப்பாடி தரப்புக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி தடை- எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவு!அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி தடை- எடப்பாடி தரப்புக்கு பெரும் பின்னடைவு!

வாதம்

வாதம்

இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதம் வைத்தார். அதில், அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது என்னுடைய அனுமதி இன்றி முடிவுகளை எடுத்துள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும். அதனால் பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது.

விதி மீறல்

விதி மீறல்

விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனால் அவர்களின் தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதம் வைத்தது. இதை கேட்ட எடப்பாடி தரப்பு பொதுக்குழுவில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். பெரும்பான்மை அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்க முடியும் என்று வாதம் வைத்தனர்.

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

இதை கேட்ட நீதிபதிகள் பெரும்பான்மை தரப்பு எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் கோர்ட் உத்தரவிற்கு இப்போதே இடைக்கால தடை விதிக்க முடியாது. வாதங்களை கேட்ட பின்பே முடிவு செய்ய முடியும் என்று கூறினர். இதையடுத்து வாதம் வைத்த ஓ பன்னீர்செல்வம் தரப்பு, பொதுக்குழுவே தவறாக கூடி உள்ளது. அதனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் தவறு என்று கூற வேண்டும். அதேபோல் கட்சி ரீதியான விதிகளை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

முக்கிய பாயிண்ட்ஸ்

முக்கிய பாயிண்ட்ஸ்

முக்கியமான பாயிண்ட்ஸ்களை கோர்ட் கேட்கவில்லை. (இந்த வாதம் கவனம் பெற்றது) அதனால் நான் கட்சிக்கு உண்மையாக உழைத்தேன். தேவையான அனைத்தையும் செய்தேன். செய்வேன். ஆனால் என்னை சட்டத்தை மீறி நீக்கி உள்ளனர். இது தொண்டர்களுக்கு எதிரானது. ராஜ்ய சபா எம்பி நியமனம் கூட எல்லாரும் சேர்ந்து தான் எடுத்தோம். ஆனால் இப்போது என்னை நீக்கி உள்ளனர் என்று ஓ பன்னீர்செல்வம் வாதம் வைத்தார். அவரின் வாதம் இன்று கோர்டில் முக்கியத்துவம் பெற்ற நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.

English summary
O Panneerselvam important point against Edappadi Palanisamy in Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X