டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளியே போங்க.. பொருட்களை தூக்கி வெளியே போட்ட ஆபீசர்ஸ்! சசிகலா புஷ்பாவுக்கே இந்த நிலைமையா? என்னாச்சு?

Google Oneindia Tamil News

டெல்லி : அதிமுகவில் மேயர், எம்பி என இருந்து தற்போது பாஜகவில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவின் டெல்லி அரசு வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து வீட்டுக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில், மேயராக 2011 முதல் 2014 வரை
இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் அதிமுக தலைமையுடன் அதிக நெருக்கம் ஏற்பட்டதன் காரணமாக 201ஆம் ஆண்டில் அதிமுக சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினை காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கபட்ட நிலையில்,
அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன் ராமசாமியை சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்டார். இதிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

சசிகலா புஷ்பா நியூஸ்.. “அறுத்துருவேன்”! பத்திரிகையாளருக்கு பாஜக மாவட்ட தலைவர் “கொலை” மிரட்டல் சசிகலா புஷ்பா நியூஸ்.. “அறுத்துருவேன்”! பத்திரிகையாளருக்கு பாஜக மாவட்ட தலைவர் “கொலை” மிரட்டல்

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் உள்ளார். இதிலும் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக கட்சி உறுப்பினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக ம் சர்ச்சை எழுந்தது. தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த இருந்தனர்.

 பாலியல் சீண்டல்

பாலியல் சீண்டல்

இவ்விழாவில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்பியும், மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது, சசிகலா புஷ்பாவிடம் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

 பகீர் புகார்

பகீர் புகார்

இதற்கு பலரும் பொன் கணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி பொன் கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணனிடம் இ மெயில் மூலமாக புகார் அளித்தார். அதில், தன் மனைவி சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த பாஜக நிர்வாகி பொன் கணபதியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பிறகு இந்த விவகாரம் அமைதியாக அடங்கிப் போனது.

காலி செய்த அதிகாரிகள்

காலி செய்த அதிகாரிகள்

இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்பியாக நியமனம் செய்யபட்ட போது, அவருக்கு டில்லியில் தங்குவதற்க்கு மத்திய அரசால் வீடு ஒதுக்கீடு செய்ய பட்டது. அவரது பதவிகாலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும் படி அரசு அவருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு அவரது குடியிருப்பிற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

English summary
Sasikala Pushpa, who has been a mayor and MP in the AIADMK and has now joined the BJP, has caused a stir after the authorities kept her belongings out of the Delhi government house and sealed the house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X