BS 6 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.. டெல்லியில் இன்று முதல் ஜனவரி 31 வரை கட்டுப்பாடு.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:டெல்லியில் காற்று மாசுபடுவதை தடுக்க இன்று முதல் 2027 ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிஎஸ் 6 வாகனங்களுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய முடியும். மாசு கட்டுப்பாட்டு சான்று வைத்திருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் கூட இன்னும் பலன் அளிக்கவில்லை.

air pollution

இந்நிலையில் தான் தற்போது முன்கூட்டியே டெல்லியில காற்று மாசுபாட்டை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1ம் தேதியான இன்று முதல் 2027 ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று முதல், டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட BS6 இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளது. இதன்மூலம் டெல்லியின் அண்டை நகரங்களான நொய்டா, குர்கிராம், ஃபரிடாபாத், காசியாபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுமார் 10 லட்சம் பழைய பெட்ரோல் -டீசல் வாகனங்கள் உள்ளே வருவது தடுக்கப்படும்.

இதனை மீறி உள்ளே வரும் வாகனங்களுக்கு சிறப்பு அமலாக்க பிரிவினர் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க உள்ளனர். இதுபற்றி தானாகவே நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்யும் ஏஎன்பிஆர் கேமராக்கள் வழியாக அபராதம் விதிக்கப்படும். அதேவேளையில் மின்சார வாகனம், சினெ்ஜி வாகனங்கள், அவசர பயன்படுத்துக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தாராளமாக வந்து செல்லலாம்.

கட்டடங்களை இடிக்கும்போது புழுதி பறக்கும் என்பதால் அத்தகைய செயலுக்கு இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். மீதமுள்ள 50 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தே பணி வழங்க வேண்டும். அத்தியாவசிய சேவைகளுக்கான பிரிவிற்கு இந்த உத்தரவு பொருந்தாது.

மேலும் அலுவலக நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சியின் அலுவலகங்களில் பணி நேரம் காலை8.30 மணி முதல் 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. டெல்லி அரசு அலுவலகங்களின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி எனறு மாற்றப்பட்டுள்ளது. வாகனங்களில் பொதுமக்கள் பயணிப்பதை தடுக்க வாகன நிறுத்தங்களில் செலுத்த வேண்டியகட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்று இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+