டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 வயது குழந்தைகள் இனி மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை.. மத்திய சுகாதாரத்துறை மிக முக்கிய அறிவுரை!

Google Oneindia Tamil News

டெல்லி: 5 வயது மற்றும் அதற்கு கீழான வயது கொண்ட குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் திடீரென தினசரி கேஸ்கள் 3 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை 38,563,632 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 344,859 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 3ம் அலை தீவிரம் அடைய ஓமிக்ரான் பரவல் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் அது தொடர்பாக நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பின்பாக குழந்தைகள் மற்றும் 18 வயது குறைவானவர்களான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மாற்றி மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாஸ்க் அணியவில்லை என்றால் வெளியே அனுப்புங்கள்.. நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை! மாஸ்க் அணியவில்லை என்றால் வெளியே அனுப்புங்கள்.. நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

 கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை தொடர்பாக பல புதிய பரிந்துரைகளை மத்திய சுகாதாரத்துறை இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 5 வயது மற்றும் அதற்கு கீழான வயது கொண்ட குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6-11 வயது கொண்டவர்கள் மாஸ்க் அணிய, அதை முறையாக பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்து இருந்தால் மட்டும் பயன்படுத்தலாம்.

குழந்தைகள் மாஸ்க்

குழந்தைகள் மாஸ்க்

மாஸ்க்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பெற்றோர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்கள் மாஸ்க் அணிய வேண்டும். 12 வயது முதல் 18 வயது கொண்டவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அவர்கள் முறையாக மாஸ்க் அணிந்து உள்ளனரா என்று பெற்றோர் அதை மேற்பார்வையிட வேண்டும். ஆன்டிவைரல் மருந்துகள் அல்லது ஆன்டிபாடி கலவை மருந்துகளை 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு பயன்படுத்த கூடாது .

மாஸ்க் கட்டுப்பாடு

மாஸ்க் கட்டுப்பாடு

மற்ற நாடுகளில் ஏற்பட்ட கொரோனா கேஸ்கள் மூலம் இந்த ஓமிக்ரான் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவதாக இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது. டேட்டாபடி தற்போது ஓமிக்ரான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா அலை எப்படி வேண்டுமானாலும் மாற்றம் அடையாளம் என்று இந்த ஆலோசனைக்கு பின் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா மருந்து

கொரோனா மருந்து

கொரோனா நோயாளிகளுக்கு மைல்ட் கேஸ்கள் அல்லது அறிகுறிகள் அற்ற கேஸ்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு antimicrobials மருந்துகள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நார்மல் கொரோனா கேஸ்கள், தீவிரமான கொரோனா கேஸ்கள் அவசியமான தேவைகள் இருக்கும் பட்சத்தில் antimicrobials மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். மற்ற தீவிரமான கேஸ்களில் தேவை கருதி, நோயாளியின் உடல்நிலையை பொறுத்து கூடுதல் antimicrobials மருந்துகளை கொடுக்கலாம்.

ஸ்டெராய்டு

ஸ்டெராய்டு

மைல்ட் கேஸ்கள் அல்லது அறிகுறிகள் அற்ற கேஸ்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்க கூடாது. இது ஆபத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம் மருத்துவமனையில் தீவிரமான கொரோனாவோடு அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு கடும் கண்காணிப்புக்கு பின்புதான் ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான கால கட்டத்திற்கு மட்டுமே ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்க வேண்டும்.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல் | Oneindia Tamil
    சிகிச்சை முறை

    சிகிச்சை முறை

    மிக தீவிரமாக, வேகமாக உடல்நிலை மோசமாகும் நோயாளிகளுக்கு மட்டும் Corticosteroids மருந்துகளை பயன்படுத்த வேண்டும். தீவிர நோயாளிகளுக்கு 5-7 நாட்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்கலாம். அறிகுறிகள் தோன்றிய முதல் 5 நாட்களுக்கு உள்ளாகவே ஸ்டெராய்டு அவசரப்பட்டு கொடுக்க கூடாது. தேவையை கருதி சில சமயங்களில் சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

    English summary
    Omicron Coronavirus: Mask is not recommended for the kids below 5 years says Union Health ministry of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X