இந்திய விவசாயிகள் ஆண்டுக்கு ரூ77,124 மட்டுமே சம்பாதிக்கின்றனராம் - தமிழக நிலையை பாருங்கள்!
டெல்லி: நாட்டின் விவசாயிகளுக்கு மாதாந்திர வருமானம் என்பது வெறும் ரூ6,427தான் என்கிற அதிர்ச்சி தகவலை ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் ஒரு ஆண்டுக்கு இந்திய விவசாயி ஒருவரின் சராசரி வருமானமே வெறும் ரூ77,124 மட்டும்தான்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ200 சொச்சம் என்பதுதான் இந்த மண்ணின் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாய். அதாவது நாட்டில் பொதுவாக விவசாயிகளின் சரசாரி மாத வருமானம் ரூ6,427 மட்டுமே.
இதில் விவசாயிக்கு செலவு என்பது ரூ6,223 மட்டும்தானாம். எஞ்சியது சேமிப்பு என்கிறது புள்ளி விவரங்கள்.

அத்தியாவசியப் பொருட்களின் விண்ணை முட்டும் விலை ஏற்றத்த்தில் எப்படி ரூ6,000 பணத்தை கொண்டு ஒரு விவசாயி குடும்பத்தை நடத்த முடியும் என்று கணக்கிட்டார்கள் எனவும் தெரியவில்லை. அதிலும் சேமிப்புக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் புள்ளி விவரங்களை உருவாக்கி உள்ளனர்.
சரி விவசாயிகளின் தேசிய சராசரி ஆண்டு வருமானமான ரூ77,124 என்கிற இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையிலேயே இந்திய மாநிலங்களின் நிலைமைகளைப் பாருங்கள். தேசிய சராசரி ஆண்டு வருமானத்துக்கு அதிகமான (!) வருவாய் உள்ள மாநிலங்கள் இவைகளாம்..
- பஞ்சாப்- ரூ. 2,16,708
- ஹரியானா- ரூ1,73,208
- ஜம்மு காஷ்மீர்- ரூ 1,52,196
- கேரளா- ரூ 1,42,688
- கர்நாடகா ரூ1,05,984
- குஜராத்- ரூ95,112
- மகாராஷ்டிரா- ரூ88,620
- ராஜஸ்தான் - ரூ88.188
- தமிழ்நாடு- ரூ83,760
- அஸ்ஸாம்- ரூ80,340
- இந்த விவசாயிகளின் தேசிய சராசரி ஆண்டு வருமானமான ரூ77,124ம் கூட கிடைக்காத மாநிலங்கள் இவைகள்..
- மத்திய பிரதேசம்- ரூ74,508
- ஆந்திர பிரதேசம் - ரூ73,292
- சத்தீஸ்கர்- ரூ62,124
- ஒடிஷா -ரூ59,712
- உத்தப்பிரதேசம்- ரூ58,944
- ஜார்க்கண்ட்- ரூ56.652
- மேற்கு வங்கம்-ரூ47, 760
- பீகார் -ரூ42,684
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications