ஆதரவு மட்டும்தான்.. பேரணியில் பங்கேற்க மாட்டோம்! மம்தாவை சந்தித்த பின் பிளானை அறிவித்த சிஜேபி
டெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே, டெல்லியில் நேற்று மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்காக மம்தா பானர்ஜியிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
அதேபோல் டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணி பேரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அதேநேரத்தில் பேரணியில் பங்கேற்க மாட்டோம் என்றும் ஆப்ஜித் தீப்கே அறிவித்தார். கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பு தனது தனித்துவமான அடையாளத்தைத் தொடர்ந்து பாதுகாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் ஆப்ஜித் தீப்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

நாங்க பங்கேற்க மட்டோம்
மம்தா பானர்ஜிக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில், எங்களின் முதல் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு அவர் உறுதியான ஆதரவை தந்தார். சவுரவ் மற்றும் ஆஸ்தோஸ் கைதாகும் போது கூட மம்தா பானர்ஜி எங்களுக்க் ஆதரவாக நின்றார். இன்று நடைபெறும் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆனால் பங்கேற்க மட்டோம்.
கரப்பான் ஜனதா கட்சி தனித்துவமான கட்சி. பொதுவான தளமாக அந்த கட்சி உள்ளது. அந்த அடையாளத்தை நாங்கள் தொடர்ந்து நிலைநிறுத்த விரும்புகிறோம்.. அதே நேரத்தில் வாக்கு திருட்டுக்கு எதிராக யார் போராடினாலும் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்" என்றார். முன்னதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் இந்தியா கூட்டணி நடத்தும் பேரணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மம்தா பானர்ஜி பேச்சு
இந்த நிலையில், சிஜேபி பங்கேற்க போவது இல்லை என்று அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க வந்துள்ள மம்தா பானர்ஜி, ஆப்ஜித் தீப்கேவையும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களையும் பாராட்டி பேசியிருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:-
நாளைய பேரணிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது. நாங்களும் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளோம். நாங்கள் இதை பெருமையாக உணர்கிறோம். இந்த போராட்டத்தை தொடங்கியவர்கள் அவர்களதான், அதை கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும்.. என்று கூறினார்.



Click it and Unblock the Notifications
