டெல்லியில் பாஜக ஆபரேசன் தோல்வி.. ஒரு எம்எல்ஏ-க்கு ரூ.20 கோடி பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அக்கட்சியின் செளரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பின்னர் கடந்த 19ம் தேதி மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மணீஷ் சிசோடியா கூறுகையில், தன்னை பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் என் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கூறியதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து, கடந்த 2 முதல் 3 நாட்களாக சில ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
சிபிஐ மற்றும் அமலாக்க துறை சோதனை நடத்தப்படும் என தொடர்ந்து அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கட்சியை விட்டு விலகும்படியும், அதற்காக பணம் அளிக்கப்படும் என ஆசை வார்த்தைகளும் கூறப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். இதையடுத்து இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் பணியின் காரணமாக வரவில்லை என்றும், மற்ற அனைவரும் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் செளரப் பரத்வாஜ் கூறுகையில், பாஜக தரப்பில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 12 எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
டெல்லி அரசை கவிழ்க்க பாஜக நடத்திய முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு எம்எல்ஏ-விடமும் தலா ரூ.20 கோடி கொடுக்க முன்வந்துள்ளனர். 40 எம்எல்ஏ-க்களை உடைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது. ஒரு எம்எல்ஏ-க்களுக்கு ரூ.20 கோடி என்றால் 40 பேருக்கு ரூ.800 கோடி பணம் அக்கட்சிக்கு எங்கிருந்து வருகிறது. இதனை சிபிஐ, அமலாக்கத்துறையினர் விசாரக்க முன்வருவார்களா என்று கேள்வி எழுப்பினார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications