Opinion Poll: பிரியங்கா காந்திக்கு உ.பி. மக்கள் தந்த ஷாக் ட்ரீட்மென்ட்?
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பிரியங்கா காந்தி டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருத்து கணிப்புகள் முடிவுகளை பார்க்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி காத்திருப்பதாகவே தெரிகிறது.
உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடுமையான போட்டி போடுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகள் உள்ளன.
உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் கட்சியே நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கும் என எழுதப்படாத ஒரு விதி உள்ளது. அதனால்தான் மிகப் பெரிய சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தின் மீது தேசிய கட்சிகள் கவனம் செலுத்துகின்றன. உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சிறுமிகள்
சிறுபான்மையினத்தை சேர்ந்த இளம்பெண்கள், சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குத்துயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்கள், சிறுமிகள் இறந்துவிட்டால் அவர்களுக்கு அவசர அவசரமாக இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என உபி போலீஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வற்புறுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.

தாக்குதல்
அது போல் பசு வதை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் உ.பி.யில் பூதாகரமாக வெடித்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க கூட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 2022 தேர்தலை முன்னிட்டே பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த அவருக்கு மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?
காங்கிரஸ் கட்சியினரும் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கேற்ப உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கட்டமைப்பை உருவாக்கித் தர அங்கேயே பிரியங்கா முகாமிட்டுள்ளார். அங்கு நடைபெறும் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரவணைத்து ஆறுதல் சொல்கிறார்.

மக்களோடு மக்களாக பழகும் பிரியங்கா
முன்னாள் பிரதமர்களின் கொள்ளு பேத்தி, பேத்தி, மகள் என்ற எந்தவித பந்தா இல்லாமல் மக்களோடு மக்களாக சராசரி பெண் போல் பழகுகிறார் என்பதால் பிரியங்காவின் அரசியல் எடுபடும் என கட்சி எதிர்பார்த்தது. இந்த நிலையில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளின் போராட்டத்தின் மீது மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றியதால் சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்கு ஆறுதல் சொல்ல சென்ற பிரியங்கா காந்தியை மாவட்ட எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். அப்போது போலீஸாரிடம் பிரியங்கா கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

ராகுல் காந்தி
இந்த விவகாரம் பிரியங்காவுக்கு மிகவும் கை கொடுத்தது. அது போல் ராகுல் காந்தியும் சீனா விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்த போது ராகுல் காந்தி கடந்த ஓராண்டுக்கு முன்னர் பேசிய வீடியோ வைரலானது. அதில் "எழுதி வைத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசே விவசாயிகளின் போராட்டத்தை வாபஸ் பெறும்". இவ்வாறாக மக்கள் மனதில் காங்கிரஸ் கட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

யார் ஆட்சி
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது குறித்து டைம்ஸ் நவ் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பாஜக 227 முதல் 254 இடங்களில் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்றும் சமாஜ்வாதி கூட்டணி கட்சி 136 முதல் 151 இடங்களில் வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 8 முதல் 14 இடங்களில் வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் சொல்கின்றன. அது போல் காங்கிரஸ் கட்சியோ 6 முதல் 11 இடங்களில் வெல்லவே வாய்ப்பிருக்கிறது.

டைம்ஸ் நவ் கருத்து கணிப்புகள்
403 தொகுதிகளில் வெறும் 6 முதல் 11 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெல்லும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது போல் மக்கள் விரும்பும் முதல்வர் பட்டியலில் பிரியங்காவுக்கு 2 சதவீதம் பேரே வாக்களித்துள்ளனர். பிரியங்காவை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் காங்கிரஸுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த கருத்து கணிப்புகள் உண்மையில் காங்கிரஸுக்கு ஷாக்கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications