டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக முக்கியமான கோரிக்கை.. தேர்தல் முடிந்ததும் ஜனாதிபதியை சந்திக்கும் 21 கட்சிகள்.. அதிரடி பிளான்!

லோக்சபா தேர்தல் முடிந்ததும், மிக முக்கியமான கோரிக்கை ஒன்றிற்காக 21 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை ஒன்றாக சேர்ந்து சந்திக்க இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வேகமாக செயல்படும் எதிர்க்கட்சிகள்.. பெரும் கலக்கத்தில் பாஜக!- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தல் முடிந்ததும், மிக முக்கியமான கோரிக்கை ஒன்றிற்காக 21 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை ஒன்றாக சேர்ந்து சந்திக்க இருக்கிறார்கள்.

    லோக்சபா தேர்தல் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தல் தற்போது முடியும் தருவாயை நெருங்கிவிட்டது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டும் மீதம் உள்ளது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவிற்கு பின் செய்ய வேண்டிய பணிகளை தற்போது எதிர்க்கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளது.

    திமுக - அமமுக கூட்டு சேர்ந்துள்ளது.. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.. முதல்வர் பழனிச்சாமி சவால்!திமுக - அமமுக கூட்டு சேர்ந்துள்ளது.. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.. முதல்வர் பழனிச்சாமி சவால்!

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இந்த லோக்சபா தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டுக்கும் மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். இதனால் இரண்டு தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    யார்

    யார்

    இதனால் மாநில கட்சிகள்தான் இந்த முறை பிரதமரை தேர்வு செய்ய போகிறது என்று கூறுகிறார்கள். அதன்படி, மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுக்கலாம்.இல்லையென்றால் பாஜகவிற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுக்கலாம். அதுவும் இல்லையென்றால் மூன்றாம் அணியை உருவாக்க கூட வாய்ப்பு உள்ளது.

    சந்திக்க திட்டம்

    சந்திக்க திட்டம்

    இது தொடர்பாகதான் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ம் தேதி இவர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர். தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் அவர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க வாய்ப்புள்ளது.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    அவர்கள் எல்லோரும் சேர்ந்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைக்க இருக்கிறார்கள். அதன்படி லோக்சபா தேர்தலுக்கு பின் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத போது அதிக இடங்களை வென்று இருக்கும் தனித்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க கூடாது. பெரும்பான்மை ஆதரவு இருக்கும் கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கடிதம் அளிக்க உள்ளனர்.

    எப்படி முக்கியம்

    எப்படி முக்கியம்

    உதாரணமாக தேர்தலுக்கு பின், பாஜக கூட்டணி 240 இடங்களில் வென்று, காங்கிரஸ் கூட்டணி 180 இடங்களை வென்று யாருக்கும் மெஜாரிட்டி (272 இடங்கள்) கிடைக்காமல் இருந்தால் பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க கூடாது. எந்த கட்சிக்கு அதிக பேர் ஆதரவு தருகிறார்களோ அவர்களைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூற முடிவெடுத்து இருக்கிறார்கள்.

    இதுதான் முக்கியம்

    இதுதான் முக்கியம்

    கர்நாடக சட்டசபை தேர்தலின் போது பாஜக கட்சி பெரும்பான்மை பெறவில்லை. மாறாக காங்கிரஸ் - மஜத கூட்டணி பெரும்பான்மை பெற்றது. ஆனாலும் பாஜக அதிக இடங்களை பெற்ற தனி கட்சி என்று கூறி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. இது குதிரை பேரத்திற்கு வழி வகுத்தது. ஆனால் கடைசியில் பாஜக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதே போல லோக்சபா தேர்தலிலும் நடக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    இப்போதே தயார்

    இப்போதே தயார்

    மொத்தம் 21 கட்சிகள் இப்படி கடிதம் அனுப்ப உள்ளது. ஆக மொத்தம் லோக்சபா தேர்தலுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்பதில் மாநில கட்சிகள் தெளிவாக இருப்பதாக தெரிகிறது. என்ன நடக்க போகிறது, யார் ஆட்சி அமைக்க போகிறார் என்று பரபரப்பு இப்போதே எழுந்துள்ளது.

    English summary
    Opposition Plans Big: They may meet the president on May 23 for an Unusual Request to form the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X