கெத்து.. ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தாங்க! பிரதமர் மோடிக்கே போன்போட்டு பேசிய யஷ்வந்த் சின்ஹா!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு போன் செய்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் முடிவுக்கு வருகிறது. இதனால் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18ல் நடைபெற உள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
வேட்புமனுத்தாக்கலுக்கு ஜூன் 29 கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூலை 21ல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர்
தற்போது ஜனாதிபதி தேர்தலில் இருமுனை போட்டி நிலவுகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறக்கப்பட்டுள்ளார்.

பாஜகவுடன் நெருக்கம்
யஷ்வந்த் சின்கா பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஐஏஎஸ் பதவி வகித்தார். அதன்பிறகு பாஜக கட்சியில் இணைந்து செயல்பட்டார். தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்தார். இதனால் இவருக்கும் பாஜக தலைவர்கள் நெருக்கமாக உள்ளனர்.
Recommended Video

பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங்கிடம் ஆதரவு
திரெளபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா ஆகியோர் கட்சி பாகுபாடு, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் இன்று யஷ்வந்த் சின்கா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். இதேபோல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனையும் அவர் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.

திங்கட்கிழமை மனுத்தாக்கல்
இதுபற்றி தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்'' என்றார். மேலும் யஷ்வந்த் சின்கா வரும் திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

பாஜக வேட்பாளர் மனுத்தாக்கல்
முன்னதாக இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பிறகு அவர் தனது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். திரெளபதி முர்முவின் வேட்புமனுத்தாக்கலில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தையும் அவர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். விரைவில் அவர் தமிழகம் வர உள்ளார். இதேபோல் பாஜகவின் தலைவர்கள் திரெளபதி முர்முவுக்கு ஆதரவாக பல்வேறு கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினரிடம் அவர்கள் ஆதரவு கோரியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் யஷ்வந்த் சின்கா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கிடம் ஆதரவு கோரியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications