பாகிஸ்தானுக்கு வார்னிங்.. இந்தியாவுடன் கைகோர்த்த ரஷ்யா.. புதினை வைத்து கொண்டு மோடி அனுப்பிய மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் சரி, குரோகஸ் சிட்டி ஹால் (ரஷ்யா) தாக்குதலாக இருந்தாலும் சரி. இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணம் ஒன்றுதான். பயங்கரவாதம். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மீதான நேரடித் தாக்குதல். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்று வருகின்றன.'' என்று விளாடிமிர் புதினை பக்கத்தில் வைத்து கொண்டு பிரதமர் மோடி கூறினார்.

டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: கடந்த 80 ஆண்டுகளாக இந்தியா - ரஷ்யா நட்புறவு துருவநட்சத்திரம் போல் உறுதியாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக புதின் இந்தியா உடனான உறவை வளர்த்து வருகிறார். எல்லா சூழல்களிலும் இந்தியா - ரஷ்யாவின் உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்கிறார். இந்தியா - ரஷ்யாவின் ஆழமான நட்புக்கு நான் புதினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இருதரப்பு உறவு பல மைல்கல்களை எட்டி உள்ளது.

pm modi vladimir putin

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2010 ல் ரஷ்யாவிற்கும், நமக்கும் status of a Special Privileged Strategic Partnership அந்தஸ்து ஏற்பட்டது. இந்தியா - ரஷ்யா இடையே எரிசக்தி துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கப்பல் கட்டும் துறையில் புதிய ஒப்பந்த்ஙகள் கையெழுத்தாகி உள்ளன. உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை வரவேற்கிறோம். "மேக் இன் இந்தியா" முயற்சியை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், திறன்களை மேம்படுத்தவும் ரஷ்யா - இந்தியா இடையே ஒத்துழைப்பு உள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்று வருகின்றன. அது பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் சரி, குரோகஸ் சிட்டி ஹால் (ரஷ்யா) தாக்குதலாக இருந்தாலும் சரி. இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணம் ஒன்றுதான். பயங்கரவாதம். பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மீதான நேரடித் தாக்குதல். அதற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை, நமது மிகப்பெரிய பலம் என்பது உள்ளிட்டவை இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளன.

ஐ.நா., ஜி20, பிரிக்ஸ், எஸ்சிஓ மற்றும் பிற மன்றங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன. இந்த மன்றங்கள் அனைத்திலும் நமது உரையாடலையும் ஒத்துழைப்பையும் தொடருவோம்'' என்றார். இதன்மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு பிரதமர் மோடி வார்னிங் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+