பெகாசஸ் உளவு வழக்கு: மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என வல்லுநர் குழு புகார்- சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: பெகாசஸ் உளவு வழக்கு குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என வல்லுநர் குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. வல்லுநர் குழு ஆய்வு செய்த 29 செல்போன்களில் ஐந்தில் உளவு மென்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப குழு அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.
பெகாசஸ் உளவு மென்பொருள் இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பு. இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்க, உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் இப்போது மீண்டும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, இஸ்ரேல் இடையே 2017-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்ததாக அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டது. அதில், "2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது அவரும் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதில், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் பெகாசஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இதன்பிறகு, 2019 ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்பு ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பெகாசஸ் உளவு மென் பொருள் வாங்கியது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கறிஞர் எம்.எல்.சர்மா கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும். கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வதற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தல் கடந்த முறை நடைபெற்ற விசாரணைகளின்போது, பெகாசஸ் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில், மத்திய அரசு சொந்த மக்களைக் கண்காணித்ததா, இல்லையா என்பதை மட்டும் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால், மத்திய அரசு அதுகுறித்து தெரிவிக்க மறுத்து விட்டது. விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் எந்தவித உத்தரவாதமும் வழங்காத நிலையில், பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தகுழுவின் மற்ற உறுப்பினர்களாக அலோக் ஜோஷி மற்றும் சந்தீப் ஓபராய் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்திய குடிமக்களின் அலைபேசிகளில் அல்லது பிற தொழில்நுட்ப சாதனங்களின் சேமிக்கப்பட்ட தரவுகளை எடுக்கவும், உரையாடல்களை ஒட்டுக் கேட்கவும், அவர்கள் தொடர்பான தரவுகளை டவுன்லோடு செய்யவும் இந்த பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய்வதே இந்தக் குழுவின் முக்கியப் பணி. இத்தகைய உளவு தாக்குதல்களை தடுக்க, கண்காணிக்க மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒருவேளை இந்திய அரசே இந்தியக் குடிமக்களை உளவு பார்த்ததா? அப்படி உளவு பார்த்தது என்றால் எந்தச் சட்டத்தின் கீழ், எந்த விதிமுறைகளின் கீழ் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த விவரங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
அதன்படியே இதுவரை 29 செல்போன்களை இந்தக் குழு ஆய்வு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த பிரப்ரவரி மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் மேலும் அவகாசத்தை வழங்கியது. இதைத்தொடர்ந்து, 3 நபர் குழு விசாரணை முடிவடைந்த நிலையில், பெகாசஸ் விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் 19ஆம் தேதியன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், 'பெகாசஸ் விசாரணை ஆணையத்துக்கு அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்தி வைத்தனர்.
பெகாசஸ் உளவு வழக்கில் வல்லுநர் குழு உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கையை தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு ஆய்வு செய்த 29 செல்போன்களில் பெகாசஸ் மென்பொருள் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் வல்லுநர் குழு ஆய்வு செய்த 5 செல்போன்களில் ஒரு உளவு மென்பொருள் இருந்தது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் உளவு வழக்கின் வல்லுநர் குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. பெகாசஸ் வழக்கின் வல்லுநர் குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைக்காததற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கண்டனம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை ஆராய்ந்த அமர்வு ஆய்வு செய்யப்பட்ட சாதனங்களில் பெகாசஸ் மால்வேர் கண்டறியப்பட்டால் அது முடிவில்லாதது என்று கூறியது. குழு 29 போன்களை ஆய்வு செய்தது, அதில் ஐந்தில் ஒரு உளவு மென்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், தீம்பொருள் பெகாசஸ் என்றால் அதை முடிவு செய்ய முடியாது. அறிக்கையின் எந்தப் பகுதிகளைப் பகிரங்கப்படுத்தலாம் என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும், ஏனெனில் ஆய்வுக்கு தங்கள் சாதனங்களைச் சமர்ப்பித்த சிலர் அதன் உள்ளடக்கங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications