டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைந்தது...வாகன ஓட்டிகள் நிம்மதி

Google Oneindia Tamil News

மத்திய அரசு நேற்றிரவு பெட்ரோல் டீசல் கலால் வரியை அதிரடியாக குறைத்து அறிவித்தது. பெட்ரோலுக்கான கலால் வரி ரூ. 5, டீசலுக்கு ரூ.10 என குறைத்தது. இது தவிர புதுச்சேரில் உள்ளிட்ட பல மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்துள்ளன.

ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு! மத்திய அரசு உத்தரவு! எவ்வளவு தெரியுமா?ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு! மத்திய அரசு உத்தரவு! எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல் டீசல் வரி குறைப்பு

பெட்ரோல் டீசல் வரி குறைப்பு

நாளுக்கு நாள் உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். டீசல் விலை உயர்வால் வாகன போக்குவரத்து விலையும் உயர்ந்து அதன்மூலம் பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம் அதிகரித்தது.

தீபாவளி பரிசு விலைக்குறைப்பு

தீபாவளி பரிசு விலைக்குறைப்பு

தீபாவளி பரிசாக பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு ரூ.5 மற்றும் 10 குறைத்தது இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை குறைந்ததால் பொதுமக்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தியாவில் பல மாநிலங்கள் கூடுதலாக வாட் வரியையும் குறைத்தன.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக்கடந்து 106 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. அதேபோல் டீசலும் சதமடித்திருந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் வரிக்குறைப்பால் தமிழகத்தில் நேற்றுமுதல் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் ரூ.106.66 விற்ற பெட்ரோல் ரூ.5.26 குறைந்து ரூ.101.40 க்கு விற்கப்படுகிறது. ரூ.102.59க்கு விற்ற டீசல் லிட்டர் ரூ.11.16 காசுகள் குறைந்து ரூ.91.43க்கு விற்பனையாகிறது.

புதுவையில் அதிரடியாக குறைக்கப்பட்ட விலை

புதுவையில் அதிரடியாக குறைக்கப்பட்ட விலை

புதுச்சேரி மாநில அரசு தீபாவளி பரிசாக வாட்வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை ரூ.13 வரையிலும், டீசல் விலை ரூ.19 வரையிலும் குறைந்து விற்பனையாகின்றது.

புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் விலை நேற்று ரூ.107.79க்கும், டீசல் ரூ.102.66க்கு விற்பனையானது. இந்நிலையில் பெட்ரோல் டீசல்.விலையில் மத்திய அரசு தனது பங்கிற்கு பெட்ரோல் ரூ.5-க்கும், டீசல் ரூ.10 வரையிலும் குறைத்து அறிவித்திருந்தது.

கூடுதலாக தீபாவளி பரிசாக புதுச்சேரி மாநிலத்தில் அரசின் சார்பில் தனது பங்கிற்கு மேலும் ரூ.7 வரை வாட்வரியை குறைத்து முதல்வர் ரங்கசாமி இன்று காலை அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுவை மக்களுக்கு கூடுதல் தீபாவளி பரிசு

புதுவை மக்களுக்கு கூடுதல் தீபாவளி பரிசு

புதுச்சேரி அரசின் பெட்ரோல் டீசல் மீதான வாட்வரியை முதல்வர் ரங்கசாமி கூடுதலாக குறைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். முதல்வர் அறிவிப்பில், இந்த வரிகுறைப்பானது அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.

9 பாஜக அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூடுதல் வரி குறைப்பு

9 பாஜக அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூடுதல் வரி குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில் பாஜக ஆளும் 9 மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு வாட் வரியை குறைத்துள்ளன. அஸ்ஸாம், திரிபுரா,மணிப்பூர், கர்நாடகா, கோவா, உ.பி, குஜராத், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட் மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளன.

English summary
Petrol and diesel prices have come down drastically ... Motorists are relieved
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X