பெட்ரோல் விலை எவ்வளவு உயரப்போகுதாம் தெரியுமா? டீசல் விலையை சொல்லவே வேண்டாம்.. கசியும் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டில் மீது கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ஜன. மாதம் முதலே உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தைக் குவித்து வந்தாலும்

உக்ரைன் நாட்டில் 3ஆவது நாளாக இன்றும் போர் தொடர்ந்து வருகிறது. முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கி உள்ள ரஷ்ய ராணுவம், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நோக்கி படுவேகமாக முன்னேறி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வந்த சர்வதேச பொருளாதாரம், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போர் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் அது சர்வதேச அளவில் பெரும் பாதிப்பைத் தரும் என்றே வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இந்தப் போர் காரணமாக ரஷ்யா மீது உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருவதால், கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டுள்ளது. கடந்த 2008இல் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார சரிவுக்குப் பின்னர், கச்சா எண்ணெய் விலை இந்தளவு உயர்ந்தது இல்லை. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலரைத் தாண்டியுள்ளது. இதனால் உலகின் பல பகுதிகளிலும் பெட்ரோடல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

 4 மாதங்களாக மாற்றம் இல்லை

4 மாதங்களாக மாற்றம் இல்லை

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படலாம் என்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டு வருகிறது. இருந்த போதிலும், இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதங்களாகவே உயர்த்தப்படவில்லை. இந்தியாவைப் பொருத்தவரை கடந்த ஆண்டு நவம்பர் 4(தீபாவளி அன்று) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது வரை பெட்ரோல், டீசவ் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 விலை உயரும்

விலை உயரும்

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபைத் தேர்தல் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை எனப் பரவலாகக் கருத்துகள் கூறப்பட்டன. இன்றுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையுயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதலே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கிவிடும் எனக் கூறப்படுகிறது. இதனைக் காலம் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் சேர்ந்தே பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 10 நாட்களில் 12 ரூபாய்

10 நாட்களில் 12 ரூபாய்

கடந்த இரண்டு மாதங்களாகவே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து வரும் சூழலில், நஷ்டத்தைத் தடுத்து பிரேக் ஈவன் ஆகவே, 10 நாட்களில் (வரும் மார்ச் 16க்குள்) பெட்ரோல் ஒரு லிட்டர் 12.1 ரூபாயும் டீசல் ஒரு லிட்டர் 15.1 ரூபாயும் உயர்த்தப்பட வேண்டும் என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சமாளிக்க வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

 இந்தியா

இந்தியா

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு டாலர் உயரும் போதும் இந்தியாவுக்குக் கூடுதலாக 1500 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. அதேபோல இது நாட்டின் நிகர வர்த்தகப் பற்றாக்குறையையும் அதிகரிப்பதாக ஓ'நீலின் பங்கு ஆராய்ச்சித் தலைவர் மயூரேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார். 10 டாலர் உயர்ந்தால், 15 பில்லியன் டாலர் வரை வர்த்தக பற்றாக்குறை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

 கோரிக்கை

கோரிக்கை

இதனால் வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் விலை தவிர்க்க முடியாதது எனக் கூறப்படுகிறது. அதேநேரம், பெட்ரோல், டீசல் விலை அதிகப்படியாக உயர்த்தப்பட்டால், அது சமானியர்களை பாதிக்கும். மேலும், டீசல் விலை உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்தும் அபாயம் உள்ளது. இதனால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் கலால் வரி மற்றும் சிறப்புக் கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+