வெளிநாட்டு உத்தரவு.. வெளிநாட்டு பயிற்சி...பிஎஃப்.ஐ. குறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை திடுக்
டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது சரியான முடிவு என கர்நாடகா, அஸ்ஸாம் முதல்வர்கள் வரவேற்றுள்ளனர்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ, பி.எஃப்.ஐ) என்ற இஸ்லாமிய அமைப்பு பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையது; அரசியல் படுகொலைகளில் ஈடுபட்டது; பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்கிறது என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய அரசு இன்று தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது. மேலும் அதன் முன்னணி அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பி.எப்.ஐ. இயக்கத்தினர் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் அலுவலகங்கள் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா, உ.பி, அஸ்ஸாம் மாநிலங்கள் இத்தடையை வரவேற்றுள்ளன. உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதாக், கேபி மவுரியா ஆகியோர் இது தொடர்பாக கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த முடிவு மிக சரியானது. அவருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். இந்த தடையை எதிர்ப்பவர்களை இந்தியா ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என்றனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா கூறுகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை வரவேற்கிறோம். இது மிகச் சரியான நடவடிக்கை. இத்தகைய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: நாட்டு மக்களின் மிக நீண்டநாள் கோரிக்கை இது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் ஆகியவையும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்திருந்தன.தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கட்டளைகளின்படி இந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு வெளி நாடுகளில் இருந்தும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. ஆகையால் மத்திய அரசு சரியான நேரத்தில்தான் தடை செய்துளது. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
பி.எஃப்.ஐ. தடை தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: இதுதான் புதிய இந்தியா. பயங்கரவாதிகள், கிரிமினல்கள், அவர்களின் அமைப்புகளை இந்தியா ஏற்காது. தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை நாடு ஏற்காது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications