ஞானேஷ் குமார் எப்படி இன்னும் பதவியில் நீடிக்கிறார்? உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. இதையடுத்து உடனடியாக அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்க கோரியும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை அவர் தன்னிசையாக எடுக்கக்கூடாது என்று அறிவிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல், தேர்தல் ஆணையத்தின் பெயரில் 14 சர்ச்சைக்குரிய முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தங்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட இந்த 14 நடவடிக்கைகள் குறித்து மற்ற இரு ஆணையர்களும் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த மனுவில் 3 முக்கியமான விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பயன்படும் படிவம்-6ஐ கடந்த ஜூலை மாதம் தன்னிச்சையாக மாற்றியமைக்கப்பட்டது. உரிய விதிகளை திருத்தாமல் இந்த படிவத்தை மாற்ற முடியாது என்று மே மாதத்தில் ஆணையர் விவேக் ஜோஷி ஆட்சேபனை தெரிவித்தார்.
இந்த ஆட்சேபனையையும் மீறி புதிய படிவம் அறிமுகம் செய்யப்பட்டதால், இது அத்துமீறிய மற்றும் சட்டவிரோதமான செயல் என்பதால் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஆகஸ்டில் ஆணையர் சந்து குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல வாக்காளர் பட்டியல் தரவுத்தளங்கள் படிப்படியாக மத்திய அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படுவது குறித்து ஆணையர் ஜோஷி கவலை தெரிவித்தார். மேலும் மாநில அளிவிலான தேர்தல் அதிகாரிகளுக்கு ERONet வெப்சைட் முழுமையாக பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும் இதற்கு காரணமான ஐடி பிரிவு இயக்குநர் ஜெனரலுக்கு அவ்வாறு கட்டுப்படுத்த எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்றும் ஆணையர் சாந்து ஆகஸ்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நீதிமன்ற அதிகாரிகளால் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் பெயரில் மேற்கு வங்க மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் சுமார் 16.10 லட்சம் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்த மேல்முறையீடுகளை செய்ய யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது யாரால் வழங்கப்பட்டது? என்று ஆணையர் சாந்து கேள்வி எழுப்பியுள்ளார். இதையெல்லாம் சுட்டிக்காட்டிய மனுதாரர் இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சுயாதீன நீதி விசாரணை ஆணையம் அல்லது சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது.
வழக்கு விசாரணை முடியும் வரை ஞானேஷ் குமார் ஆணையராக பணியாற்ற இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த இடைக்காலப பகுதியில் இதேர்தல் ஆணையத்தின் பணிகள் சாந்து மற்றும் ஜோஷி ஆகிய இரு ஆணையர்களின் ஒருமனதாக முடிவின்படி நடக்க வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
