டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிராமப்புறங்களில் ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைக்கணும்.. அதிகாரிகளுக்கு, பிரதமர் மோடி உத்தரவு!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடி உயர் மட்ட குழுவினரிடம் ஆலோசனை நடத்தினார்.

''கொரோனா வைரஸும் ஓர் உயிரினம்தானே.. அதை வாழ விடுங்கள்'' .. சொல்வது பா.ஜ.க முன்னாள் முதல்வர்! ''கொரோனா வைரஸும் ஓர் உயிரினம்தானே.. அதை வாழ விடுங்கள்'' .. சொல்வது பா.ஜ.க முன்னாள் முதல்வர்!

இந்த கூட்டத்தில் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ள உள்ளூர் மட்டத்தில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் விரைவான சோதனை அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

திட்டம் தயாரிக்கணும்

திட்டம் தயாரிக்கணும்

கிராமங்களில் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும், குறிப்பாக ஆஷா மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்று பிரதமர் கூறினார். கிராமப்புறங்களில் வீட்டு தனிமைப்படுத்தலின் போது போதிய சிகிச்சை வழிகாட்டுதல்களை வழங்கவும் கிராமப்புறங்களில் ஆக்ஸிஜன் வழங்குவதை உறுதி செய்ய ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

விளக்கிய அதிகாரிகள்

விளக்கிய அதிகாரிகள்

சில மாநிலங்களில், வென்டிலேட்டர்கள் இருந்தபோதிலும் அது வேலை செய்யவில்லை என்று அதிகாரிகள் பிரதமரிடம் கூறினார்கள். மத்திய அரசிடம் இருந்து கொடுக்கப்பட்ட வென்டிலேட்டர்களை ஆய்வு செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் க்ரூனா தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கினார்கள்.

பரிசோதனை அதிகரிப்பு

பரிசோதனை அதிகரிப்பு

மார்ச் மாத தொடக்கத்தில் வாரத்திற்கு சுமார் 5 மில்லியன் பரிசோதனைகள் செய்யப்படுவதால், நாட்டில் கொரோனா சோதனைகள் வேகமாக வளர்ந்துள்ளதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை தற்போது வாரத்திற்கு சுமார் 13 மில்லியனாக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் படிப்படியாக குறைந்து வருவதாகவும், மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்பு குறைகிறது

பாதிப்பு குறைகிறது

ஒவ்வொரு நாளும் 4 லட்சத்தைத் தாண்டிய புதிய பாதிப்புகள் தற்போது குறைந்து வருவதாக பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,26,098 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,890 பேர் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Modi held consultations with a high-level committee on corona infection prevention and vaccination
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X