பாஜக பிரதான எதிரியாக 'உதயநிதி'! அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்த மோடி! அமைச்சர்களுக்கு 'அரச' கட்டளை!
டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சனாதன ஒழிப்பு முழக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விவாதித்தது. இந்தக் கூட்டத்தில் சனாதனம் மீதான விமர்சனங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் பதிலடி தர பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அம்மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. ஒழிக்கப்பட வேண்டும். சனாதனம் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கக் கூடியது. அதனை அழிக்க வேண்டும் என்றார். ஆனால் பாஜக தலைவர்களோ வட இந்தியாவில் சனாதனிகளை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசிவிட்டார் என பொயான தகவலை பரப்பிவிட்டனர். இதனால் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலரும் வட இந்தியாவில் இருந்து உதயநிதிக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் பாஜக அல்லாத தலைவர்கள் சனாதன ஒழிப்பு பேச்சின் நோக்கம் புரிந்ததால் அமைதியாக இருந்து வருகின்றனர். இதனிடையே உதயநிதியின் தலையை சீவி எடுக்க வேண்டும் என உ.பி. சாமியார் ஒருவர் ரூ10 கோடி விலை அறிவித்தார். இதுவும் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. திமுகவை கடுமையாக எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்ம ஒழிப்பு தொடர்பான பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டதாம். சனாதனம் தர்மம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
எங்கேயோ போய்விட்டது உதயநிதி பேச்சு!
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications