விண்வெளியில் இருக்கும் சுபான்ஷு சுக்லாவுடன் உரையாடிய பிரதமர் மோடி.. என்ன பேசினார் தெரியுமா?
டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடியுள்ளார். சுபான்ஷு சுக்லாவின் உடல் நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
அமெரிக்காவின் டிராகன் விண்கலம் வாயிலாக 4 பேர் குழுவில் ஒருவராக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் ஆக்ஸியம் - 4 என்ற திட்டத்தின் கீழ் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டது. இந்த ஆக்சியம் திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் 25 ஆம் தேதி பிற்பகல் 12.01 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றார். சுமார் 28 மணிநேர பயணத்துக்குப் பின்னர் 400 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் இணைந்தது.
40 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்தக் குழுவினர் 60 பரிசோதனைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர். அவற்றில் 7 பரிசோதனைகளுக்கு சுபான்ஷு சுக்லா தலைமை தாங்குகிறார்.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடி உள்ளார். சுபான்ஷு சுக்லாவின் உடல் நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக டிராகன் விண்கலத்திலிருந்து சக விண்வெளி வீரர்களுடன் நேரடியாகப் பேசிய சுபான்ஷு சுக்லா, "விண்வெளியில் நுழைந்த பிறகு உடல்நிலை நன்றாக இருப்பதாக உணரவில்லை. அதன் பிறகு நுண் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். எப்படி சாப்பிடுவது, எப்படி நடப்பது என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தை போல் கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications