டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிஇ படித்துவிட்டு ஐபிஎஸ் ஆனது ஏன்?.. தமிழகத்தின் கிரண் ஸ்ருதியிடம் மோடி கேள்வி.. செம கலந்துரையாடல்!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தின் இளம் ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியுடன் இன்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையாடல் இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

புதிதாக ஐபிஎஸ் பணிக்கு தேர்வாகி இருக்கும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார். ஹைதராபாத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி காணொளியில் பேசினார்.

பிரதமர் மோடி இதில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் உடனும் பேசினார். அவர்களின் தனிப்பட்ட விவரங்களை குறித்தும், எப்படி ஐபிஎஸ் ஆனார்கள் என்பது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களுடன் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவுபள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களுடன் 10 முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

தமிழக அதிகாரி

தமிழக அதிகாரி

அதன்பின் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதியிடம் பிரதமர் மோடி பேசினார். கிரண் ஸ்ருதியின் பூர்வீகம் குறித்தும், அவர் எப்படி ஐபிஎஸ் அதிகாரி ஆனார் என்பது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது கிரண் ஸ்ருதியிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, நீங்கள் ஏன் ஐபிஎஸ் ஆனீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன கிரண் ஸ்ருதி, எனக்கு கிரண் பேடி போல ஆக வேண்டும் என்று ஆசை.

கிரண் ஸ்ருதி

கிரண் ஸ்ருதி

என் பெற்றோரும் அதனால்தான் எனக்கு கிரண் என்று பெயர் வைத்தனர். சின்ன வயதில் இருந்து நான் ஐபிஎஸ் கனவோடு படித்தேன். அதே கனவோடு என்னை தயார்படுத்திக் கொண்டேன். அதன்பின், ஏன் என்ஜினியரிங் படித்துவிட்டு ஐபிஎஸ் துறையை தேர்வு செய்தீர்கள் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கிரண் ஸ்ருதி, எனக்கு சீருடை அணிந்து சேவையாற்ற வேண்டும் என்று ஆசை.

ஆசை என்ன

ஆசை என்ன

மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று ஆசை. எனது பணியை நான் சிறப்பாக செய்வேன், மக்களுக்காக உழைப்பேன் என்று கிரண் ஸ்ருதி கூறினார். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, இளம் ஐபிஎஸ் வீரர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய வேண்டும். நீங்கள் இளம் வயதில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆக்கியுள்ளீர்கள்.

யோகா செய்வார்கள்

யோகா செய்வார்கள்

உங்கள் மனம் டென்சன் ஆகாமல் இருக்க யோகா செய்ய வேண்டும். உங்கள் உடைக்கான மதிப்பை இழந்து விட கூடாது. நீங்கள் சிங்கம் போன்ற போலீஸ் படங்களை பார்த்துவிட்டு அதிரடியாக செயல்பட நினைக்க கூடாது. அமைதியாக உங்களுக்கான பணிகளை செய்யவும். எப்போதும் கவனமாக இருங்கள். எதிர்பார்க்க முடியாத விஷயங்களை எதிர்பாருங்கள், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
PM Modi's talk with young IPS officers today get applause.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X