தடுப்பூசி போட்டு பாகுபலியாக மாறுங்கள் -பிரதமர் பேச்சு.. அப்போ கொரோனா என்ன கட்டப்பாவா?ட்விட்டர் வைரல்
டெல்லி: பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு அனைவரும் பாகுபலியாக மாறுவார்கள் என்றும் கூறினார்.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலை நாட்டில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது தான் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி
கொரோனா காரணமாகத் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் மூலம் ஒருவர் பாகுபலியாக மாறிவிடுவதாகத் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனாவை வெல்லப் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து வேக்சின்கள் மட்டுமே நம்மைப் பாதுகாக்கும். மக்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அனைவரும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது எடுத்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோன்.

பாகுபலி
பாகு-இல்(இந்தியில் தோள்பட்டை) செலுத்தப்படும் தடுப்பூசி ஒருவரை பாகுபலியாக மாற்றும். கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் இதுவரை 40 கோடி பாகுபலிகள் உருவாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான ஒரு விவாதத்தை அரசு விரும்புகிறது. கொரோனா குறித்த விவாதத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், அனைத்து எம்பிகளிடம் இருந்தும் பயனுள்ள பரிந்துரைகளைப் பெறுகிறோம்.

பதில் சொல்ல விடுங்கள்
இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய முறைகளை பெற முடிகிறது. குறைபாடுகளும் சரி செய்யப்படுகிறது. எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒரே இடத்தில் அணிதிரள வேண்டும். அனைத்து எம்பிகளும் அரசை நோக்கி கடினமான மற்றும் கூர்மையான கேள்விகளைக் கேட்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அதேநேரம் கேள்விகளுக்கான பதிலை அளிக்க அரசை அனுமதிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் ஒரு கட்டப்பா
இதுதான் ஜனநாயகத்தை உயர்த்தும், மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, வளர்ச்சியின் வேகத்தை மேம்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை பாகுபலியுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமரின் பேச்சு ட்விட்டரில் வைரலாகியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் ஒருவர், "கொரோனா வைரஸ் ஒரு கட்டப்பா மாதிரி தான். பின்னால் இருந்து நம்மைத் தாக்குகிறது. என்ன நாம் ஜாக்கிரதையாக இருக்கவில்லை என்றால் ரியல் வாழ்க்கையில் நமக்கு இரண்டாம் பாகம் எல்லாம் இருக்காது" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தியா கொரோனா வைரஸ்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 38164 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது நேற்று உறுதியான வைரஸ் பாதிப்பை விட 7.2% குறைவாகும். நாட்டில் 28ஆவது நாளாகத் தொடர்ந்து கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5% குறைவாகவே உள்ளது. கொரோனா குறைந்தாலும், மாநில அரசுகள் தளர்வுகள் அறிவிப்பில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தடுப்பூசி பணிகள்
கொரோனா தற்போது குறைந்துள்ள நிலையில், மூன்றாம் அலை தொடங்கும் முன் தடுப்பூசி பணிகளை மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், வேக்சின் உற்பத்தி அதிகரிக்கக் குறைந்தது இன்னும் சில வாரங்களாவது ஆகும் என்பதால், பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் தடைப்பட்டுள்ளன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications