அமெரிக்க அதிபர் டிரம்பை மிஞ்சி.. இன்ஸ்டா உலகில் பெரும் சாதனை படைத்த பிரதமர் மோடி!
டெல்லி: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 10 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடியை 100 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
தற்போதைய தொழில்நுட்ப உலகில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர்.

2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 100 மில்லியன், அதாவது 10 கோடி பாலோயர்ஸை கடந்த முதல் அரசியல்வாதி மற்றும் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 15 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பிரேசில் அதிபர் 14.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் நான்காவது இடத்தையும், துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் 11.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய் 6.4 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளனர்.
பட்டியலில் அடுத்ததாக இருக்கும் ஐந்து முக்கிய உலகத் தலைவர்களின் மொத்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை, பிரதமர் மோடியின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16.1 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி 12.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications