டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி சொல்ல தவறிய 2 முக்கிய விஷயங்கள்.. எப்படி சமாளிக்கும் இந்தியா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு, நாடு தழுவிய அளவில் அடுத்த 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தனித்திருப்பது தான் ஒரே வழி என்று மோடி அப்போது தெரிவித்தார். அந்த 21 நாட்களும் அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது, மற்ற எந்த ஒரு நடவடிக்கையும் செயல்படாது என்று அவர் அறிவித்தார்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, 'மக்கள் ஊரடங்கு' என்று அறிவிக்கப்பட்ட தினத்தில் எந்த அத்தியாவசிய சேவைகள் கிடைத்ததோ, அந்த அத்தியாவசிய சேவைகள் தொடரும் என்பதுதான் மோடியின் அறிவிப்பு.

அதாவது, மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவை மட்டும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதான் இனி வரும் நாட்களுக்கும் பொருந்தும் என்கிறார் மோடி.

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.. பிரதமர் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.. பிரதமர்

சப்ளை செயின்

சப்ளை செயின்

ஆனால், இந்த மளிகை கடைகளாக இருக்கட்டும், அல்லது மாமிச கடைகளாக இருக்கட்டும், இவற்றுக்கு சப்ளை எப்படி செய்யப்படும்? சப்ளை செய்வதற்கு வாகனங்கள் இயக்கப்பட வேண்டும். அதற்கு அரசு அனுமதிக்குமா, வாகனங்களை ஓட்டிச் செல்வார்கள், காவல்துறையினரால் கடும் கெடுபிடிக்கு உள்ளானால், அவர்கள் எந்த ஆவணங்களை காட்டி தாங்கள் அத்தியாவசிய தேவைக்காக போகிறோம் என்பதை தெரிவிக்க முடியும்?

நடைமுறை சிக்கல்

நடைமுறை சிக்கல்

உதாரணத்துக்கு.. ஒரு மளிகைக் கடைக்காரர் சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி வருவார். அவர் சந்தைக்குத்தான் செல்கிறார் என்பதை எப்படி காவல்துறையிடம் நிரூபிப்பது? இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கான சப்ளை பாதிக்கப்படும். அது மக்களையும் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து விரிவான விளக்கம் மற்றும் என்ன மாதிரி வசதிகள் செய்யப்படும் என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

வருமானம்

வருமானம்

அடுத்ததாக, வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருந்தால், தினக்கூலி மற்றும் வாரக் கூலி தொழிலாளர்களுக்கு, வருமானம் எப்படி வரும், அவர்கள் உணவுத் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வார்கள், என்பது தொடர்பாக மத்திய அரசு எதையும் அறிவிக்கவில்லை. தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளன. ஆனால், தேசிய அளவில் மத்திய அரசால் பொருளாதார அல்லது உணவு போன்ற அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

தெளிவு தேவை

தெளிவு தேவை

வுஹான் மாகாணம் லாக்டவுன் செய்யப்பட்டிருந்தபோது, அங்கு உணவு சப்ளை, ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டது. அனைவரும் வீடுகளுக்குள் இருந்தபடி, ஆன்லைன் மூலமாக பொருட்களை பெற்றனர். உணவுப் பொருட்களும் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டன. சில இடங்களில் ரோபோக்கள் அந்தப் பணியைச் செய்தன. ஆனால், நமது நாட்டில் எப்படி மக்களுக்கு உணவு சென்று சேரும் என்ற எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த குழப்பங்களுக்கு, விரைவில் மத்திய அரசு ஒரு பதில் சொன்னால்தான், மக்களுக்கு தெளிவு ஏற்படும்.

English summary
Pm Narendra Modi didn't mention about the food supply and essential services on his speech on nationwide lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X