கேரளா நிலச்சரிவு: உயிரிழந்தோருக்கு மோடி, ராகுல் இரங்கல்- பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்!
டெல்லி: கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர். கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தொர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் உறுதி அளித்தார். இதேபோல வயநாடு தொகுதி முன்னாள் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரு பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலை கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி இருப்பதால் பதற்றம் நிலவுகிறது.

நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்பு பணி முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் கோவை சூலூர் விமானப் படை விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வயநாடு பகுதியில் அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
மேலும் கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு முழு உதவியை வழங்கும் என உறுதி அளித்தார் நரேந்திர மோடி. மேலும் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்; படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். வயநாடு ஆட்சியரையும் தொடர்பு கொண்டு மீட்பு பணி நிலவரங்களை ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications