டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொன்மையான தமிழ்மொழியை கற்கும் எனது முயற்சி வெற்றி பெறவில்லை.. பிரதமர் மோடி உருக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்மொழியை கற்க வேண்டும் என்கிற என் முயற்சி வெற்றி பெறவில்லை என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்தார்.

பிரதமர் கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பிரதமராக பதவியேற்ற நாள் முதல் மன் கீ பாத் எனும் ரேடியோ நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

PM Narendra Modi to address Mann ki Baat today at 11 am

இந்த நிலையில் இன்றைய தினம் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி அவர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையை தொடங்கினார். அவர் தனது உரையில் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற உள்ளது. மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இளைஞர்களின் மத்தியில் புதுமையின் உணர்ச்சியை காண முடிகிறது. அறிவியல் என்பது எல்லை இல்லாதது. கோடை காலத்துக்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை தூய்மைப்படுத்த வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.

சர் சி.வி.ராமன் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்ட இன்றைய நாள் தேசிய அறிவியல் தினம். நமது விஞ்ஞானிகள் குறித்து இளைஞர்கள் நிறைய படிக்க வேண்டும். தற்சார்பு பொருளாதார இலக்குக்கு அறிவியல் மிகப் பெரிய பங்களிப்பு செய்கிறது.

தமிழ் தொன்மையான மொழி... தமிழ் கலாச்சார விழாக்கள் புகழ் பெற்றவை - மோடி புகழாரம் தமிழ் தொன்மையான மொழி... தமிழ் கலாச்சார விழாக்கள் புகழ் பெற்றவை - மோடி புகழாரம்

தமிழ் மொழியின் பெருமை குறித்து என்னிடம் பலரும் தெரிவித்தனர். தமிழ்மொழியை கற்க வேண்டும் என்கிற என் முயற்சி வெற்றி பெறவில்லை. தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. தமிழ் இலக்கியங்கள் உன்னதமானவை.

மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 74ஆவது முறையாக இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த உரையை நிகழ்த்தி வருகிறார்.

English summary
PM Narendra Modi to address Mann ki Baat today at 11 am. This is 74 th address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X