பாஜகவுக்கு எதிரான “மெகா” கூட்டணி.. நேரடி அரசியலில் பி.கே! “பெவிகால்” - நிதீஷ் மீது ஓபன் அட்டாக்
டெல்லி: 2024 தேர்தலுக்கு பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை கட்டமைக்க நம்பிக்கையான முகம் தேவை என்றும் நிதீஷ் குமார் அதற்கு சரியாக இருக்க மாட்டார் என்று பிரபல தேர்தல் வியூக நிபுணரும் ஐ பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 2024 தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு வலுவான இயக்கமும் நம்பிக்கையான முகமும் தேவை என்றார்.
பாஜகவும் பிரசாந்த் கிஷோரும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக நிதீஷ் குமார் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியை கேட்டு சிரித்த அவர், பீகார் முதலமைச்சர் சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றார்.

நிதீஷ் குமார்
"நிதீஷ் குமார் கடந்த மாதம் பாஜக கூட்டணியில் இருந்து விலகி தற்போது தலைவர்களையும், எதிர்க்கட்சிகளையும் சந்தித்து வருகிறார். இதனால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க நிதீஷ் குமார் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது.

மெகா கூட்டணி
பாஜகவுக்கு எதிராக 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட நம்பிக்கையான முகம் தேவைப்படுகிறது. அத்துடன் மக்கள் நம்பிக்கையும், அரசியல் பணியாற்றும் தொண்டர்களின் பலமும் அவசியம். நிதீஷ் குமாருக்கும் என் மீது எந்த கோபமும் இல்லை. இது ஒருவகையான பேசும் விதம். எனக்கும் அவருக்கும் நெருக்கமான உறவு உள்ளது.

நேரடி அரசியல்
பீகாரில் ஜன் சூரஜ் என்ற பிரச்சார இயக்கத்தை அறிமுகம் செய்த பிரசாந்த் கிஷோர் சிறந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அறிவித்து உள்ளார். அடுத்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு - 7 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே போட்டி இருக்காது. பீகார் அரசியல் 180 டிகிரி திரும்பிவிட்டது. அடுத்த தேர்தலுக்குள் இன்னும் பல திருப்பங்களை பார்க்கலாம்.

முதலமைச்சர் இருக்கை
பீகாரில் பல தேர்தல் கூட்டணிகள் உருவாகவும் உடையவும் செய்கின்றன. உடையாத ஒன்று இருக்கிறது என்றால், நிதீஷ் குமாரும் முதலமைச்சர் இருக்கையும்தான். அது எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி. இதை அவரால் மட்டுமே செய்ய முடியும். அவரது விளம்பர தூதராக பெவிகால்தான் உள்ளது." என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications