தேதி குறிச்சாச்சு! ஜனாதிபதி தேர்தலில் ‛ஸ்ட்ராங்’ வேட்பாளர்! எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆலோசனை!
டெல்லி: எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆலோசனைக்கு தேதி குறித்துள்ளன. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் ‛ஸ்ட்ராங்க்' வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளனர்.
நம் நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூலை 18 ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் ஜூலை 21ல் அறிவிக்கப்பட உள்ளது.

மம்தா தலைமையில் ஆலோசனை
இந்நிலையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கான முன்னெடுப்பை மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தார். அதன்படி எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜூன் 15ல் டெல்லியில் நடந்தது. இதற்கு மம்தா பானர்ஜி தலைமை வகித்தார்.

17 கட்சி பிரதிநிதிகள்
இந்த கூட்டத்தை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திர சேகர் ராவ், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சிரோன்மணி அகாலிதளம், தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சியினர் புறக்கணித்தனர். இதில், திமுக சார்பில் கட்சியின் மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, சிவசேனா சார்பாக ப்ரியங்கா சதுர்வேதி, மதசார்பற்ற ஜனதாதளம் சார்பாக தேவகவுடா, குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத் பவார், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட 17 கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

சரத்பவார் போட்டியிட மறுப்பு
இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்படி கேட்டு கொள்ளப்பட்டது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதுபற்றி மம்தா பானர்ஜி கூறுகையில், "நாட்டில்எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றியை வேண்டிய சூழல் உள்ளது. 17 அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். சரத்பவார் போட்டியிட மறுத்துவிட்டார். ஜூன் 21ம் தேதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்'' என்றார். இதுகுறித்து சரத் பவார் தனது டுவிட்டரில், ‛‛ஜனாதிபதி தேர்தலுக்கான எனது பெயரை பரிந்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். எனினும் எனது வேட்புமனுவின் முன்மொழிவை நான் பணிவுடன் நிராகரித்து விட்டேன்'' என குறிப்பிட்டு இருந்தார்.

ஜூன் 21ல் மீண்டும் ஆலோசனை
இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகள் சார்பில் ஜூன் 21ல் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமை வகிக்க உள்ளார். இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரின் பெயர் இறுதி செய்யப்பட உள்ளது. இதில் மம்தா பானர்ஜி உள்பட முந்தைய கூட்டங்களில் பங்கேற்ற 17 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சிவசேனா வலியுறுத்தல்
இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக பலமான ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுபற்றி இன்று சிவசேனா , ‛சாம்னா' பத்திரிகையில் தலையங்கம் எழுதியுள்ளது. அதில், ‛‛ஜனாதிபதி தேர்தலில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரின் பெயர்கள் உள்ளது. இன்னும் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது'' என கூறியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications