பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குளறுபடி : ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு
டெல்லி: பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால் அப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டு இருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்பாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. இதையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும் எனவும் மாற்று பயணத்திற்காக பிரதமர் சாலை வழியாக செல்ல நேரும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனக் கூறினர்.
இந்நிலையில் முதல்வரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கம் அளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தங்கள் மீது தவறு இல்லை எனவும் இது பாஜகவின் திட்டமிடப்பட்ட செயல் என கூறியுள்ளார். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழு இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் எனவும் குழுவில் பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளர் பஞ்சாப் டிஜிபி, சண்டிகர் டிஜிபி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications