தப்பு தப்பா பேப்பர் விளம்பரம்.. ஏன் இப்படி பொய்யா சொல்றீங்க.. யோகி அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
டெல்லி: கொல்கத்தா நகரத்தில் உள்ள பாலத்தை உத்தரபிரதேசத்தில் உள்ளது போல விளம்பரப்படுத்தியதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி .
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் நிலவரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஆளும் பாஜக அரசு, ஐந்து வருடமாக மேற்கொண்ட பணிகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு வருகின்றது.
இதேபோலத்தான் யோகி ஆதித்யநாத் அரசு, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், அரசு செய்த சாதனைகள் என்ற பெயரில் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரபிரதேச மாநிலத்தை மாற்றி அமைத்துள்ளோம் என்று அந்த விளம்பரத்திற்கு தலைப்பு போடப்பட்டது. ஆனால் விளம்பரத்தில் இருந்த ஒரு மேம்பாலம் கொல்கத்தா நகரில் உள்ளதாகும். இதேபோல அடுக்குமாடி கட்டிடமும் கொல்கத்தாவில் உள்ளதுதான்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவுக்கு ஏழாம் பொருத்தம். இந்த நிலையில்தான் அந்த மாநிலத்தில் உள்ள புகைப்படங்களை எடுத்து உத்திரப்பிரதேச மாநில பாஜக தனக்கு விளம்பரம் செய்திருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

பிரியங்கா காந்தி
இது தொடர்பாக பிரியங்கா காந்தி ஹிந்தி மொழியில் பேஸ்புக்கில் கூறுகையில், ஏற்கனவே, வேலைவாய்ப்பு தொடர்பான தவறான விளம்பரங்களை கொடுத்து மாட்டிக்கொண்டது யோகி ஆதித்யநாத் அரசு. இப்போது தவறான மேம்பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் போன்ற புகைப்படங்களை பாஜக அரசு வெளியிட்டு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம்
உத்தரபிரதேச மாநில மக்கள் , முதல்வரையும், ஆட்சியையும் மாற்றுவதற்கு முடிவு செய்துவிட்டனர். மக்களின் பிரச்சினைகள் பற்றி இந்த அரசுக்கு எதுவும் தெரியவில்லை. வெறுமனே பொய்யான விளம்பரங்களை வெளியிட்டு வருவதால் மட்டும்தான் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாளிதழ் பொறுப்பேற்பு
இதனிடையே விளம்பரத்தை வெளியிட்ட, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இது தங்களுடைய தவறு என்று வருத்தம் தெரிவித்து இருக்கிறது. விளம்பரப் பிரிவில் புகைப்படத்தை மாற்றி வைத்துவிட்டதால் இந்த குழப்பம் இருந்ததாகவும் டிஜிட்டல் பதிப்புகள் அனைத்திலும் அந்த விளம்பரத்தை நீக்கி விட்டதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications