நபிகள் விவகாரம்-பாஜக மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவால் நாடு எரிகிறது- மன்னிப்பு கேளுங்க- உச்சநீதிமன்றம்
டெல்லி: நபிகள் நாயகம் குறித்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் அவதூறு கருத்தால் இந்த நாடே பற்றி எரிகிறது; நுபுர் சர்மாவின் அவதூறு கருத்தால்தான் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்; நுபுர் சர்மா தமது அவதூறு பேச்சுகளுக்காக டிவியில் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா அவதூறாக பேசியது சர்வதேச விவகாரமானது. இதனையடுத்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன.

உதய்பூர் படுகொலை
நுபுர் சர்மாவை ஆதரித்து கருத்துகளை பதிவிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் டெய்லர், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தம் மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் நுபுர் சர்மா. அதில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நுபுர் சர்மா தெரிவித்திருந்தார்.

நாடு பற்றி எரிகிறது- உச்சநீதிமன்றம்
நுபுர் சர்மாவின் மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்: நுபுர் சர்மாவின் தேவையில்லாத உளறல்களால் நாடு இப்போது பற்றி எரிகிறது. நாட்டின் அசாதாரண நிலைக்கு நுபுர் சர்மாதான் காரணம். மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் நுபுர் சர்மா கருத்துகளை தெரிவித்துள்ளார். இரு பிரிவினருக்கு இடையே மோதல்களை தூண்டும் வகையில் நுபுர் சர்மா பேசியுள்ளார்.

உதய்பூர் படுகொலைக்கு பொறுப்பு
நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என கூறியிருக்கிறார். நுபுர் சர்மாவின் பேச்சால் தேசப் பாதுகாப்புக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உதய்பூரில் டெய்லர் படுகொலைக்கு காரணமே நுபுர் சர்மாவின் பேச்சுதான். நாட்டில் நடைபெற்று வரும் தற்போதைய சம்பவங்களுக்கு நுபுர் சர்மா என்ற தனிநபர் மட்டுமே பொறுப்பு.

அதிகார மமதை- மன்னிப்பு கேளுங்க
ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் இத்தகைய கருத்துகளை தெரிவித்திருக்கக் கூடாது. சில நேரங்களில் அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார்கள். நுபுர் சர்மா மன்னிப்பு கேட்பது, தமது கருத்துகளை வாபஸ் பெறுவது என்பது எல்லாம் காலம் கடந்த பின்னரானது. நுபுர் சர்மா மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நுபுர் சர்மாவை ஏன் போலீசார் கைது செய்யாமல் இருக்கின்றனர். நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி












Click it and Unblock the Notifications