பிஎப்.7 கொரோனா அச்சம்.. இந்தியாவில் அறிமுகமாகும் ‛கோவோவேக்ஸ்’ பூஸ்டர் டோஸ்..அனுமதிகோரும் சீரம்
டெல்லி: சீனாவில் பரவும் ஓமிக்ரான் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் ‛கோவோவேக்ஸ்' எனும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் கோரியுள்ளது.
கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழலில் சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

பிஎப் 7 வகை கொரோனா
சீனாவில் ஓமிக்ரானின் உருமாறிய BF.7 வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனா ஒரு மர்மதேசமாக இருப்பதால் தினசரி பாதிப்பு, பலி பற்றிய எந்த விபரங்களும் வெளியாகவில்லை. இருப்பினும் சீனாவின் நிலைமையை கவனிக்கும் சுகாதார நிபுணர்கள் அங்கு கொரோனாவால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலியும் வரும் நாட்களில் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முன்னெச்சரிக்கை
சீனாவைபோல் இந்தியாவில் குஜராத் மற்றும் ஒடிசாவை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு பிஎப்.7 ஓமிக்ரான் உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்யைாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் 2 சதவீத பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாஸ்க் அணிவது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும் கூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் வாய்மொழியாக அறிவுரை வழங்கி உள்ளனர்.

தடுப்பூசி செலுத்த அறிவுரை
மேலும் நாட்டில் கொரோனா வைரஸின் மரபணு சோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதோடு தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி உள்பட பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும் பொதுமக்கள் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை அதிகமாக செலுத்தி உள்ளனர். மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன.

‛கோவோவேக்ஸ்’ பூஸ்டர் டோஸ்
இந்நிலையில் தான் ‛கோவோவேக்ஸ்' எனும் புதிய பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு மகாராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இந்த நிறுவனம் தான் இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வழங்கிய நிலையில் தற்போது கோவோவேக்ஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரியுள்ளது. இந்த தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த நிலையில் அதனை இந்தியாவில் தயாரித்து வினியோகம் செய்யும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் அந்த நிறுவனம் சார்பில் இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு...
இந்த தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்கும் பட்சத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதையடுத்து 2 டோஸ் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த கோவோவேக்ஸ் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும். இந்த தடுப்பூசியை அவசர காலத்துக்கான பூஸ்டராக பயன்படுத்த கடந்த 2021 டிசம்பரில் உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications