டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரபேல்: பிரான்ஸுக்கும், அனில் அம்பானிக்கும் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் மோடி.. ராகுல் கடும் தாக்கு

ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஒரு இடைத் தரகர் போல செயல்பட்டு இருக்கிறார், அனில் அம்பானிக்காக அவர் உளவு வேலை பார்த்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரான்ஸுக்கும், அனில் அம்பானிக்கும் இடைத்தரகரான மோடி- ராகுல் பரபர- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி அனில் அம்பானிக்கும் - பிரான்ஸ் அரசுக்கும் இடையே இடைத்தரகர் போல செயல்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    ரபேல் ஒப்பந்த ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. இந்த ஊழல் தொடர்பாக புதிய ஆவணங்களை வெளியிட்டு, பாஜக மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை இன்று அடுக்கினார்.

    ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இந்த முறை சிஏஜி அறிக்கை தொடங்கி அனில் அம்பானி வரை பல விஷயங்கள் குறித்து ராகுல் பேசினார்.

     அனில் அம்பானி தரகு

    அனில் அம்பானி தரகு

    ராகுல் தனது பேட்டியில், ரபேலில் பிரதமர் மோடி இடைத்தரகராக செயல்பட்டு இருக்கிறார். அனில் அம்பானிக்காக மோடி சட்டங்களை வளைத்து இருக்கிறார். அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தம் நடந்தது எப்படி தெரியும்?. ஒரு ராணுவ ஒப்பந்தம் யார் சொல்லி அனில் அம்பானிக்கு தெரிந்தது.

     சிஏஜி அறிக்கை

    சிஏஜி அறிக்கை

    ரபேல் பற்றிய சிஏஜி அறிக்கை ஒரு திருட்டு அறிக்கை. திருடருக்கு திருடர் செய்த திருட்டு அறிக்கைதான் இந்த சிஏஜி அறிக்கை. இது உச்ச நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகும். இது மோடி அவராகவே உட்கார்ந்து எழுதிய அறிக்கை.

     ரபேல் திருட்டு

    ரபேல் திருட்டு

    ரபேல் திருட்டுக்கு மோடிதான் முழு பொறுப்பு. அவர் ஒரு உளவாளி போல செயல்பட்டு ராணுவ ரகசியத்தை அனில் அம்பானியிடம் கொடுத்து இருக்கிறார். ரபேல் ஒப்பந்தம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே அனில் அம்பானிக்கு தெரிந்து இருக்கிறது. இதுகுறித்து அம்பானி பிரான்ஸ் அதிகாரிகளிடம் பேசியுள்ளார்.

    எப்படி

    எப்படி

    பிரான்ஸ் அதிகாரிகளிடம், தனக்குத்தான் ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார். ஏர்பஸ் அதிகாரி ஒருவரின் மெயில் இதை நிரூபிக்கிறது. இதுதான் அந்த மெயிலின் ஜெராக்ஸ் (ஆவணங்களை காட்டினார்). அப்படியென்றால் இந்த ஒப்பந்தம் குறித்து அனில் அம்பானிக்கு முன்பே தெரிந்துள்ளது.

     தேசதுரோக வழக்கு போடுங்க

    தேசதுரோக வழக்கு போடுங்க

    இப்போது சொல்லுங்கள், இது எப்படி அவருக்கு தெரியும். பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூட ரபேல் ஒப்பந்தம் குறித்து தெரியாது. அம்பானிக்கு எப்படி தெரிந்தது. இது உண்மை என்றால் மோடிதான் இதற்கு முழு பொறுப்பு. இதற்கு பின் அவர்தான் இருக்கிறார். இதனால் மோடி மீது தேசதுரோக வழக்கை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

    English summary
    This email is clear. An Airbus executive wrote that Mr.Anil Ambani met the French Defence Minister and told him 10 days before the #Rafale deal was signed that he was going to get it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X