டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உண்மையை மறைப்பது.. பற்றைக்குறையை மறுப்பது.. எல்லாம் 'அவரது' போலி பிம்பத்தை காக்க.. ராகுல் தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு ஒருவரது பிம்பத்தைக் காக்க உண்மையை மறைப்பது, பற்றைக்குறையை மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 3.49 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 2,700க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Rahul Gandhi alleges GOI is under-reporting Corona to save Modis fake image

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 1.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்பும் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது. இதெல்லாம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள தகவல்கள்.

இருப்பினும், உண்மையான கொரோனா பாதிப்பு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உயிரிழந்தவர்கள் தகனம் செய்யக் கூட டோக்கன் வாங்கி, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியைத் தனது ட்விட்டரில் பதிவிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அந்த செய்தியைப் பகிர்ந்துள்ள ராகுல் தனது ட்விட்டரில், "உண்மையை மூடிமறைப்பது, ஆக்சிஜன் பற்றாக்குறையை மறுப்பது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பது. மத்திய அரசு அவரது போலி பிம்பத்தைக் காக்க அனைத்தும் செய்கிறது" என யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்த ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த ட்வீட் தற்போது ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டு வைராகியுள்ளது.

English summary
Rahul Gandhi alleges GOI is under-reporting Corona to save Modi's fake image
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X