2 மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி, பிரஷாந்த் கிஷோர் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டதா? வெளியான தகவல்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் சிங் பட்டேல், அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
Recommended Video
இஸ்ரேலிய ஸ்பைவேர் 'பெகாசஸ்' '(Pegasus)ஐப் பயன்படுத்தி இந்தியாவில், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக நேற்று முதல் வரிசையாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்ப்ட்ட செல்போன்களின் முழு கட்டுப்பாடும் அதை கண்காணிப்பவருக்கு போய் விடுமாம்.

உளவு செய்தி
பாரிஸ் நகரத்தைச் சேர்ந்த வணிக நோக்கற்ற பார்பைடன் ஸ்டோரிஸ் என்ற அமைப்பு, 17 மீடியா நிறுவனங்களுடன் இணைந்து இந்த உளவு தொடர்பான தகவல்களை திரட்டி உள்ளது. இதுபற்றி தி வயர் என்ற ஆங்கில செய்தி வெப்சைட் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. மத்தியில் தற்போது அமைச்சராக இருக்க கூடிய இரண்டு பேர், 40 பத்திரிக்கையாளர்கள், மூன்று எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு நீதிபதி, பல தொழிலதிபர்கள், பல சமூக போராளிகள் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரசாந்த் கிஷோர்
தி வயர் வெப்சைட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பிரசாந்த் கிஷோர் செல்போன் உளவு பார்க்கும் பெகாசஸ் சாப்ட்வேர் மூலமாக ஹேக் செய்யப்பட்டு உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் அப்போது பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மமதா பானர்ஜி கட்சிக்காரர்
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி அபிஷேக் பானர்ஜி செல்போனும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. இவர் மம்தா பானர்ஜியின் உறவுக்காரர். ஆட்சி அதிகாரத்தில் இவரது தலையீடு அதிகமாக இருக்கிறது என்பது பாஜக குற்றச்சாட்டாக இருந்து வந்தது. ஜூன் மாதம் 14 நாட்கள், ஜூலை மாதத்தில் 12 நாட்கள் பிரசாந்த் கிஷோர் செல்போனில் ஹேக்கிங் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை பிரசாந்த் கிஷோர் ஜூலை 13-ஆம் தேதி சந்தித்த தினத்தன்று கூட அவரது செல்போன் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறது.

ராகுல் காந்தி செல்போன்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பயன்படுத்தக்கூடிய 2 செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம், என்று தி வயர் செய்தி வெளியிட்டிருக்கிறது . மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் சிங் படேல் ஆகியோர் செல்போன்கள் 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை உளவு பார்க்கப்பட்டதாக அந்த வெப்சைட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது.

மத்திய அமைச்சர்கள் பெயர்
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பில் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தொடர்பு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரகலாத் சிங் பட்டேல் நீர்வளத் துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது மட்டும் கிடையாது.. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக இருந்த பாஜகவின் வசுந்தரராஜே சிந்தியாவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய் செல்போன் உளவு பார்க்கப்பட்டு இருக்கிறது. இவர் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியின் சிறப்பு அலுவலராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் மறுப்பு
இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக இது போன்ற ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாக ஆரம்பித்து இருக்கிறது .இது உள்நோக்கம் கொண்டது. வாட்ஸப் நிறுவனத்துடன் சேர்ந்து இதுபோல உளவு பார்க்கப்பட்டதாக ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் கூறக்கூடிய நபர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications