'Only PR' - பிரதமர் மோடிகிட்ட எந்த திட்டமும் இல்லை - பாஜகவை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!
டெல்லி: இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மத்திய அரசாங்கத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில், அங்கு சிக்கி இருக்கும் மாணவர்களை மத்திய அரசு மீட்டு இந்தியா அழைத்து வருகிறது.
உக்ரைனில் இந்தியர்களை மீட்பது, 5 மாநில தேர்தல் என ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

ராகுல் காந்தி
இன்று தன்னுடைய ட்விட்டரில் ராகுல் காந்தி, ''இந்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை. இந்திய பணமதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகிறார்கள். பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இன்னும் உக்ரைனில் பல மாணவர்கள் சிக்கி உள்ளார்கள். சீனா நமது எல்லைகளை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் மோடி அரசு வெறும் பிஆர் வேலைகளை மட்டுமே செய்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பு
உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள தடை காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு இன்று சரிவு கண்டது. அதுபோலவே கச்சா எண்ணெய் விலையும் கடும் உயர்வு கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 77.96 ஆக சரிவடைந்தது.

பெட்ரோல் விலை
உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் இன்றுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இதையடுத்து பெட்ரோல் விலை குறித்தும் ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார்.'' மோடி அரசின் தேர்தல் சலுகைகள் முடிவடைய உள்ளதால் மக்கள் தங்கள் வாகனங்களில் போதுமான அளவு பெட்ரோல்களை நிரப்பி கொள்ளுங்கள்'' என ட்வீட் செய்திருந்தார்.

ஆபரேஷன் கங்கா
ஆபரேசன் கங்கா திட்டம் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது, ''உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பது அரசின் வேலை. அதை சாதகம் அல்லது உதவி என எடுத்துக் கொள்ளக் கூடாது. வெட்கக்கேடான முறையில் மாணவர்கள் நடத்தப்படுவது ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும். அபரேசன் காங்கா திட்டத்தின் இந்த கசப்பான உண்மை மோடியின் உண்மையான முகத்தை காட்டுகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications