டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போட்டுத் தாக்கும் மங்கி பாக்ஸ்.. இந்தியாவுக்கு ஆபத்தா? எடுக்க வேண்டி நடவடிக்கை என்ன! விரிவான தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மங்கி பாக்ஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது தொடர்பாக மருத்துவ சங்க மருத்துவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

Recommended Video

    Monkey Pox பரவல் தீவிரமாகிறதா? | Health

    இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு பேருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. கேரளாவில் மூன்று பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் மங்கி பாக்ஸ் உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே மங்கி பாக்ஸ் பாதிப்பை உலக சுகாதார அமைப்பும் பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

     சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட மங்கி பாக்ஸ்! அறிகுறி என்ன! எப்படி பரவும்.. டிரீட்மென்ட் என்ன சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட மங்கி பாக்ஸ்! அறிகுறி என்ன! எப்படி பரவும்.. டிரீட்மென்ட் என்ன

     மங்கி பாக்ஸ்

    மங்கி பாக்ஸ்

    இதனிடையே மங்கி பாக்ஸ் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தில் மருத்துவர் லிமாயே கூறுகையில், "மங்கி பாக்ஸ் என்பது ஒரு வகை வைரசால் ஏற்படுகிறது. இது பெரியம்மை போன்றது தான் ஆப்பிரிக்காவில் இருந்த இந்த வகை வரைஸ் முதல்முறையாக உலகின் பல நாடுகளுக்குப் பரவ தொடங்கி உள்ளது. நெருங்கிய தொடர்பு இருப்பவர்களுக்கு வைரஸ் பரவும். அதேபோல விலங்கில் இருந்தும் இந்த வைரஸ் பரவும்.

     அதிகரிக்கும் மங்கி பாக்ஸ்

    அதிகரிக்கும் மங்கி பாக்ஸ்

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது. குறிப்பாக 6 நாடுகளில் மட்டும் 8000 பேருக்கு மங்கி பாக்ஸ் உறுதியாகி உள்ளது. இது கோவிட்-19 போல புதிய வகை வைரஸ் இல்லை. இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே வைரஸ் பரவும் என்பதால் இதன் பரவலை நிறுத்துவது மிகவும் எளிது. அதேபோல வைரஸ் பாதித்தவருடன் குறைந்தது 3 மணி நேரம் இருக்க நேரிட்டாலும் வைரஸ் பாதிப்பு ஏற்படலாம்.

     கொரோனாவை போல இல்லை

    கொரோனாவை போல இல்லை

    கொரோனாவை போல இது வேகமாகப் பரவாது. எனவே பெரும்பாலும், குடும்ப உறுப்பினர்கள் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கே இந்த பாதிப்பு ஏற்படும். ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் மூலமே இந்த வைரஸ் இதுவரை அதிகம் பரவி இருக்கிறது. எனவே, அதற்கு ஏற்ற வகையில் நமது கண்காணிப்பு பணிகள் இருக்க வேண்டும். அதேநேரம் மங்கி பாக்ஸ் பாலியல் ரீதியாகப் பரவும் நோய் (STI) அல்ல என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

    அறிகுறிகள்

    அறிகுறிகள்

    பொதுவாக மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டவருக்கு 5 முதல் 13 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும். காய்ச்சல், தலைவலி, சோம்பல், முதுகுவலி ஆகியவை ஆரம்ப அறிகுறிகள் ஆகும்.அதன் பின்னர், உடலில் மெல்லக் கொப்புளங்கள் ஏற்படத் தொடங்கும். இரண்டு முதல் ஐந்து வாரங்களில் இந்த கொப்புளங்கள் வறண்டு தானாகவே உதிர்ந்து விழுந்துவிடும். பொதுவாகப் பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றித் தான் கொப்புளங்கள் ஏற்படும். எனவே, அவை வெளியே தெரியாது.

     பாதுகாப்பு

    பாதுகாப்பு

    பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான பாதிப்பு மட்டுமே ஏற்படுகிறது. அவர்களுக்கு எவ்வித மருத்துவச் சிகிச்சையும் இல்லாமல் தானாக குணமாகிவிடும். அதேநேரம் தீவிர பாதிப்பு உடையவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை தேவை. பெரியம்மை பாதிப்புக்குத் தரும் மருந்துகளையே நாம் இதற்கும் தரலாம். மங்கி பாக்ஸ் பாதித்தவர்களிடம் இருந்து தனித்து இருந்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளாம். மேலும், மாஸ்க் மற்றும் கிளவுஸ்களை பயன்படுத்த வேண்டும். கைகளைச் சோப்பு அல்லது சானிடைஸர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.

    நகரங்கள்

    நகரங்கள்

    டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை போன்ற ஜன நெருக்கடியான நகரங்களில் மங்கி பாக்ஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது கடினம். அதேநேரம் கொரோனாவை போலப் பரவாது என்பது மல்ல செய்தி! இருப்பினும் பெருநகரங்களில் பொது போக்குவரத்து மூலம் வைரஸ் எளிதாகப் பரவும் என்பதை இதையெல்லாம் கருத்தில் கொண்டே அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆண் ஒரிண சேர்க்கையாளர்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என்றாலும் கூட, யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

     உயிரிழப்பு இல்லை

    உயிரிழப்பு இல்லை

    மங்கி பாக்ஸ் பாதிப்பு பெரியளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தாது. மங்கி பாக்ஸ் பாதிப்பிற்கு எனத் தனியாக வேக்சின்கள் இல்லை. அதேநேரம் பெரியம்மைக்குப் பயன்படுத்தும் வேக்சினை நாம் இதற்கும் யூஸ் செய்து கொள்ளலாம். இந்தியாவில் பலரும் குரங்கு அம்மையையும் குரங்கு காய்ச்சலையும் குழப்பிக் கொள்கின்றனர். மங்கி பாக்ஸ் என்பது வைரசால் ஏற்படும் பாதிப்பு, குரங்கு காய்ச்சல் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும். விலங்குகள் கடிக்கும்போது, இந்த குரங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    English summary
    India raise of Monkeypox cases: (அதிகரிக்கும் மங்கி பாக்ஸ் இந்தியாவில் ஆபத்தை ஏற்படுத்துமா) All things to know about Monkeypox.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X