கத்தோலிக்கர் ஆனால் கிறிஸ்தவர் கிடையாது என்பது போல இருக்கு.. ராஜ ராஜ சோழன் இந்து தான்.. காங் தலைவர்!
டெல்லி: ராஜ ராஜ சோழன் இந்து தான் என்றும், அவர் இந்து இல்லை சைவ மதத்தை சேர்ந்தவர் என்று கூறுவது ஒருவர் கத்தோலிக்கர் ஆனால் கிறிஸ்தவர் கிடையாது என்பது போல உள்ளது என்றும் காங்கிரஸ் தலைவர் கரண் சிங் தெரிவித்துள்ளார்.
கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.
மணி ரத்னம் இயக்கிய இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

வெற்றிமாறன் கருத்து
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன், ''சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது'' என்று கூறினார்.

கமல்ஹாசன்
வெற்றி மாறனின் இந்த கருத்து தற்போது பெரும் விவாததை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி மாறனின் கருத்துக்கு ஆதரவாக சிலரும்.. எதிராக சிலரும்.. என பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால், இந்த விவகாரம் கடந்த சில நாட்களாகவே பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. வெற்றிமாறனின் கருத்துக்கு ஆதரவாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கருத்து தெரிவித்தார்.

ஹெச்.ராஜா பதில்
கமல்ஹாசன் கூறுகையில், ''அப்போது வைணவம், சிவம் மற்றும் சமணம் தான் இருந்தது.. இதையெல்லாம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஆங்கிலேயர்கள்தான் இந்து என்று அழைக்கத் தொடங்கினர்'' என்றார். இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹெச்.ராஜா தனது ட்விட்டரில், ''சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்'' என்று கடுமையாக சாடியிருந்தார்.

சிவபெருமான் ஆதி இந்து கடவுள்
வெற்றி மாறன் தொடங்கி வைத்த இந்த விவகாரம் தேசிய அளவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கரண் சிங் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். கரண் சிங் கூறுகையில், ''சிவபெருமான் ஆதி இந்து கடவுள். மிகப்பெரிய சிவன் கோவிலான தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டினார். அங்கு நான் பலமுறை சென்று வழிபட்டுள்ளேன்.

கத்தோலிக்கர் ஆனால் கிறிஸ்தவர் கிடையாது
ராஜ ராஜ சோழன் இந்து இல்லை சைவ மதத்தை சேர்ந்தவர் என்று கூறுவது எப்படி இருக்கிறது என்றால், ஒருவர் கத்தோலிக்கர் ஆனால் கிறிஸ்தவர் கிடையாது என்பது போல உள்ளது. மதத்தை குழப்பும் வகையிலான இத்தகைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை'' என்று தெரிவித்துள்ளார்.
-
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி?












Click it and Unblock the Notifications