டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

57 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி தேர்தல் தேதி அறிவிப்பு.. முன்கூட்டியே தேர்தல் ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: காலியாகும் 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட, மே 24ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் சார்பில் 6 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் வெல்ல வாய்ப்பு உள்ளது.

 57 ராஜ்யசபா சீட்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.. அன்றே முடிவுகள் அறிவிப்பு! 57 ராஜ்யசபா சீட்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.. அன்றே முடிவுகள் அறிவிப்பு!

 காலியாகும் ராஜ்யசபா இடங்கள்

காலியாகும் ராஜ்யசபா இடங்கள்

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியோடு மொத்தமாக 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் 6 இடங்கள், ஆந்திராவில் 4, தெலங்கானாவில் 2 , சத்தீஸ்கரிஸ் 2, மத்திய பிரதேசத்தில் 3 , கர்நாடகாவில் 4, ஒடிசாவில் 3, மகாராஷ்டிராவில் 6, பஞ்சாப்பில் 2, ராஜஸ்தானில் 4, உத்தர பிரதேசத்தில் 11, உத்தரகாண்டில் 1, பீகாரில் 5, ஜார்கண்ட்டில் 2, ஹரியானாவில் 2 என மொத்த 15 மாநிலங்களில் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவுபெறுகிறது.

மாநிலங்களவை தேர்தல்

மாநிலங்களவை தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலையில் நடைபெறவுள்ளதால் முன்கூட்டிய மாநிலங்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வந்தது.

இந்நிலையில், காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட, மே 24ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மே 31

கடைசி நாள் மே 31

மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31ம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திரும்ப பெற ஜூன் 3ஆம் தேதி கடைசி நாள்.

ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் 10ல் தேர்தல்

ஜூன் 10ல் தேர்தல்

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திரும்ப பெற ஜூன் 3ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை

தமிழ்நாட்டை பொறுத்தவரை

தமிழ்நாட்டை பொறுத்தவரை டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார், ராஜேஷ்குமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 29ல் நிறைவு பெறுகிறது.

தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க 4 இடங்களையும், அ.தி.மு.க 2 இடங்களையும் வெல்ல வாய்ப்பு உள்ளது. விரைவில் இந்தக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Rajya sabha Elections announced to 57 Rajya Sabha seats on June 10, result same day : Announces Election commission
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X